Categories
Featured கல்வி

உங்க ஸ்மார்ட்போன்ல கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிரோட இருக்கும் தெரியுமா…?

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவிவரும் நிலையில், நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் கொரோனா வைரஸ் வந்தால் என்ன செய்வது? அப்படி வைரஸ் தொற்றிக்கொண்டால், அவை எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்? என்ற அச்சம் அனைவரிடத்திலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்றை தவிர்க்க ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது? எப்படி கையால்வது என்பது போன்ற பல குழப்பங்களுக்குமான தீர்வு இதோ உங்களுக்காக! 

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வில், SARS- CoV வைரஸைப் போலவே, coronavirus (SARS-CoV-2) ஸ்டீல் மற்றும் கடினமான பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் சுமார் 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) வாழும் என்று கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ், அட்டை மேற்பரப்பில் சுமார் 24 மணிநேரமும், தாமிரத்தில் சுமார் 4 மணி நேரமும் வாழும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் NIH ஆய்வில் கூறப்பட்டுள்ளது. , ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்பு கொண்ட, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட் / மடிக்கணினி போன்ற அனைத்து கேஜெட்டிற்கும் வரலாம்.

நாம், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போனை, ஈரமான மைக்ரோஃபைபர் துணியால் மேற்பரப்பைத் துடைக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள ஓலியோபோபிக் கோட்டிங் இவற்றை அழிக்கக்கூடும் என்பதால், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் screen protector-ஐ இன்ஸ்டல் செய்யலாம், அதற்கு பதிலாக இதை சுத்தம் செய்யலாம், இதனால் டிஸ்பிளே கோட்டிங் சேதமடையாது.

ஐபோன் சாதனத்தை, “70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் துடைப்பான் / க்ளோராக்ஸ் கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தி, காட்சி, விசைப்பலகை / பிற வெளிப்புற மேற்பரப்புகள் போன்வற்றை துடைக்கலாம். ப்ளீச் பயன்படுத்த வேண்டாம். போனை திறக்கும் போது, ஈரப்பதம் ஆவதை தவிர்க்கவும். ஆப்பிள் தயாரிப்பை சுத்தம் செய்ய எந்த முகவர்களிடமும் கொடுக்காதீர்கள். துணி அல்லது தோல் மேற்பரப்பை பயன்படுத்த வேண்டாம்” என்று ஆப்பிள் கூறுகிறது.

Categories
கல்வி

இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்

Categories
கல்வி

யுபிஎஸ்ஆர் – தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள்

யுபிஎஸ்ஆர் – தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள்

கோலாலம்பூர் – செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான புபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழ் மொழி, ஆங்கிலம், அறிவியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை வி ஷைன் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டிகளும் மாதிரி கேள்வித் தாள்களுடனும், அதற்கான விடைகளுடனும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வுகள் நெருங்கி வரும் இந்த வேளையில் மாணவர்கள் மீள்பார்வை செய்யும் விதத்திலும், தேர்வுத் தாள்களை ஒரு பயிற்சியாகச் செய்து பார்த்து இறுதித் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இந்த நூல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை கல்வித் துறையில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதியிருக்கிறார்.

அறிவியல் தேர்வு வழிகாட்டி நூலை அந்தப் பாடத்தைக் கற்பிப்பதில் நீண்ட கால அனுபவம் கொண்ட தேன்மொழி இராஜனும், விக்னேஸ்வரி சாம்பசிவமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

தமிழ் மொழிக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள் எல்லா மாநிலங்களிலும் நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் உதவியோடு தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு கிடைக்கப் பெறாத தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கீழ்க்காணும் செல்பேசி எண்ணில் தங்களைகத் தொடர்பு கொள்ளலாம் என நூல் பதிப்பாளர்களான வி ஷைன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தமிழ் மொழிக்கான தேர்வு வழிகாட்டி நூலை, நன்கொடையாளர்களின் ஆதரவோடு அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இலவசமாகவே வழங்க வி ஷைன் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆங்கிலம், அறிவியல் ஆகிய நூல்கள் சில பள்ளிகளில் மட்டுமே நன்கொடையாளர்களின் ஆதரவோடு அந்தந்த தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

தலா RM 9.90 விலைகொண்ட ஆங்கிலம், அறிவியல் நூல்கள் யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கென சிறப்புக் கழிவு விலையில் தற்போது விற்பனையில் உள்ளன.

Categories
Featured கல்வி

தமிழ்ப்பள்ளி  தேசிய அமைப்பாளர் பதவி காலி…சிவகுமார்

தமிழ்ப்பள்ளி  தேசிய அமைப்பாளர் பதவி காலி…சிவகுமார்

தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்ட நிலையில் அப்பதவிக்கு புதியவரை நியமிப்பது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்தாலோசிப்பேன் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் தெரிவித்தார்.

இப்பதவியில் முன்பு இருந்த பாஸ்கரன் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்பதவிக்கு இன்னமும் வேறொருவர் நியமிக்கப்படாமலே உள்ளார்.

இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்ற நிலையில் இவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சரிடம் பேசுவேன் என்று சிவகுமார் கூறினார்.

இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கல்வி பிரிவுக்கு பொறுப்பேற்றிருக்கும் சிவகுமார், இந்தியர்களின் கல்வி விவகாரங்களில் ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

Categories
Featured கல்வி

தீபாவளிக்கு மறுநாள் தேர்வா? ரத்து செய்தது கல்வி அமைச்சு

தீபாவளிக்கு மறுநாள் தேர்வா? ரத்து செய்தது கல்வி அமைச்சு

கோலாலம்பூர்-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நடத்தப்படவிருந்த இறுதியாண்டு தேர்வை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.

இந்நாட்டில் மூன்றாவது பெரிய இனமான  இந்துக்கள் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் 7ஆம் தேதி கெடா மாநிலத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் நான்காம் படிவ மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான அட்டவணை சமூக ஊடகங்களில் வைரலானது.

இவ்விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ஆம் தேதி நடத்தப்படவுள்ள தேர்வு விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் அத்தேதியில் நடத்தப்படவிருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
Featured கல்வி

கல்வித் துறையில் ஒட்டுமொத்த சீரமைப்பு தேவை! –கல்வியாளர்

கல்வித் துறையில் ஒட்டுமொத்த சீரமைப்பு தேவை! –கல்வியாளர்

கோலாலம்பூர், ஆக.21- கல்வி அமைப்பில் சில மாற்றங்களை கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ள வேளையில், கல்வி முறையின்ஒட்டுமொத்த கட்டமைப்பும் முழுமையாக சீரமைப்பு செய்யப் பட வேண்டும் என்று கல்வியாளரான தஜூடின் ரஸ்டி அறிவுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், கல்வி அமைச்சு பல்வேறான மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. அதனை தாம் வரவேற்கும் வேளையில், தேவையான மாற்றங்கள் இன்னும் நிகழ்த்தப் படவில்லை என்று ஊ.சி.எஸ்.ஐ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

“நம் நாட்டின் கல்வி கட்டமைப்பு எதை நோக்கி பயணிக்கிறது என்பது எனக்கு இதுவரை குழப்பமாகவே உள்ளது. நாட்டின் கல்வி அமைப்பு முழுமையாக சீரமைக்கப் பட வேண்டும்.

“கனமான பள்ளிப் பைகளை குறைப்பது, மற்றும் வெள்ளை காலணிகளுக்குப் பதில் கருப்பு காலணிகளை அணிவது போன்ற முயற்சிகளை நான் வரவேற்கின்றேன். ஆனால், இவை, கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வல்ல” என்றார் அவர்.

கல்வி அமைப்பில் சீரமைப்பு செய்வதற்காக ஒரு பிரத்யேக குழு அமைக்கப் பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டும் வகையில், பணிக்குழு ஒன்று தோற்றுவிக்கப் பட வேண்டும். இக்குழுக்கள் வாயிலாக சமுதாயம் நன்மை அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தக் குழுக்கள், தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டும். தற்போது செயல்பாட்டில் உள்ள தேசிய பேராசிரியர்கள் மன்றத்தால், யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படுவதில்லை என்று தஜூடின் சுட்டிக் காட்டினார்.

“தற்போதைய சூழ்நிலையில், பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வியாளர்கள், தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக ஆய்வுகளை நடத்துகின்றனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் ஆய்வுகளால், சமுதாயத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை” என்றார் அவர்.

பல்கலைக்கழகங்களின் கல்வி அமைப்புகளில் மாற்றங்கள் நிகழ்த்தப் படாவிடில், இன்னும் 20 ஆண்டுகளில் சமுதாயம் எவ்வித மேம்பாடும் காணாமல், ‘மடிந்து’ விடும் என்று அவர் கருத்துரைத்தார்.

Categories
English News Featured கல்வி தலையங்கம்

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் நாட்டில் பல்வேறு மாற்றங்களையும், அரசு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் சீர்திருத்தங்களையும், மேம்பாடுகளையும் கொண்டுவர போவதாக தேர்தலில் கொள்கை அறிக்கையில் வாக்குறுதிகளை வழங்கி, அது தற்போது தோல்வி அடைந்த நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் அதிரடியாக பள்ளி மாணவர்களின் காலணி நிற மாற்றத்தைப் பற்றி அறிவிப்பு செய்திருப்பது ஏற்புடைய செயல்தானா என்று மக்கள் சிந்தித்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மலேசிய கல்வி கொள்கைகளிலும், அமலாக்கங்களிலும் அதன் அடைவு நிலைகளிலும், எவ்வளவோ குறைபாடுகளும் கோளாறுகளும் இருக்கும் வேளையில் கருப்பு காலணிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? மலேசிய கல்வி கொள்கை இது நாள் வரை ஓர் அரசியல் தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப் படுகிறதே தவிர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் தேவைகளின் அடிப்படையிலும் உலக மாறுதல்களுக்கேற்பவும் அமையவில்லை என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள், புதிய பள்ளிகள், நவீன வசதிகள் என்று மேம்பாடுகள் கண்டிருந்தாலும்கூட இன்னும் தீர்க்கப்படாத மாணவர்கள் பற்றாக்குறை, கல்வி தரம், ஆசிரியர்கள் நியமனம், இடம் மாற்றம், இடைநிலை பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எதிர்காலம், மறு நிர்மாணிப்புகளில் உள்ள பலவீனங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் கண்டு அமைச்சு அதனை களைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் சமூகவியல் ஆய்வாளரும் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தில் தேசிய தலைவருமான ஆர்.கே. ரமணி கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

Categories
Featured கல்வி மாநிலம்

நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்…

நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்…

கோலாலம்பூர் –  இங்குள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நீர்வளம், நிலம், மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எஸ்.பி.எம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற நேசா உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு நிதியை நேசா கூட்டுறவுக் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது. நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்த டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியிலும், சிந்தனையிலும் பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கல்வி ஊக்குவிப்பு நிதித் திட்டம் தொடங்கப்பட்டு நேசா கூட்டுறவுக் கழகம் அத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நேசா கூட்டுறவுக் கழகத்தின் துணைப் பொது நிர்வாகி கே.ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றியதோடு, அறிவிப்பாளராகவும் இருந்து நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

தலைமையுரையாற்றிய நேசா இயக்குநர் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் டாக்டர் அ.இலட்சுமணன், பல்வேறு பணிகளுக்கு இடையில் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்து சிறப்பித்திருக்கும் சேவியர் ஜெயகுமாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தான் மருத்துவருக்குப் படித்த காலத்தில் ஏழ்மையான சூழலில் தனது குடும்பத்தினர் குறிப்பாகத் தனது தாயார் பட்ட கஷ்டங்களைத் தனதுரையில் விவரித்த டாக்டர் இலட்சுமணன் இப்போது மாணவர்கள் அப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நேசா இந்த கல்வி ஊக்குவிப்பு நிதியை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நேசா இயக்குநர் வாரிய உறுப்பினர்களும், நேசா இயக்குநர் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.இராஜண்ணனும் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியை நேசா சார்பாக வழங்கிய சேவியர் ஜெயகுமார், தனது சிறப்புரையில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சிறந்த முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், நன்றாகத் தேர்ச்சி பெற முடியாமல் கல்வியைப் பாதியிலேயே முடித்து விட்டு வெளியேறும் நிலைமைக்கு ஆளாகும் மாணவர்கள் குறித்தும் நேசா போன்ற இயக்கங்கள் யோசிக்க வேண்டும் – அவர்களுக்கும் உதவும் வழிவகைகளை ஆராய வேண்டும் – என சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

Categories
கல்வி பொது செய்திகள்

யுபி தோட்டம் முன்னாள் பள்ளி மாணவர்கள் மூன்றாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி

யுபி தோட்டம் முன்னாள் பள்ளி மாணவர்கள் மூன்றாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி

எதிர் வரும் 28 ஜூலை மாதம் யுபி தோட்டம் முன்னாள் தமிழ் பள்ளி மாணவர்கள் மூன்றாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சியும் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாடக நடைபெற உள்ளது.

.

யுபி தோட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு செயும்மாறு நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர் திரு ரவி அன்போடு அழைக்கின்றார். நிகழ்ச்சியில் சிறப்பு யுபி தோட்டத்தில் வசித்த மாணவர்களின் ஒருவரான மைவெளிச்சம்.கோம் துணை நிறுவனர் கோகிலம் கணபதி கலந்துக்கொள்கின்றார்.

தொடர்பு எண்  ரவி / சந்திரன் . 01133771373

Categories
Featured Penang கல்வி நீதிமன்றம் மாநிலம்

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது. அதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அ.தெய்வீகன் உறுதிப்படுத்தினார்

.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கலைக்கல்வி போதிக்கும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு 2017-ஆம் ஆண்டு சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை முடிவடைந்தவுடன் இவ்வழக்கு தொடர் நடவடிக்கைக்காக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும்.