நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

0
125

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் நாட்டில் பல்வேறு மாற்றங்களையும், அரசு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் சீர்திருத்தங்களையும், மேம்பாடுகளையும் கொண்டுவர போவதாக தேர்தலில் கொள்கை அறிக்கையில் வாக்குறுதிகளை வழங்கி, அது தற்போது தோல்வி அடைந்த நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் அதிரடியாக பள்ளி மாணவர்களின் காலணி நிற மாற்றத்தைப் பற்றி அறிவிப்பு செய்திருப்பது ஏற்புடைய செயல்தானா என்று மக்கள் சிந்தித்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மலேசிய கல்வி கொள்கைகளிலும், அமலாக்கங்களிலும் அதன் அடைவு நிலைகளிலும், எவ்வளவோ குறைபாடுகளும் கோளாறுகளும் இருக்கும் வேளையில் கருப்பு காலணிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? மலேசிய கல்வி கொள்கை இது நாள் வரை ஓர் அரசியல் தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப் படுகிறதே தவிர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் தேவைகளின் அடிப்படையிலும் உலக மாறுதல்களுக்கேற்பவும் அமையவில்லை என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள், புதிய பள்ளிகள், நவீன வசதிகள் என்று மேம்பாடுகள் கண்டிருந்தாலும்கூட இன்னும் தீர்க்கப்படாத மாணவர்கள் பற்றாக்குறை, கல்வி தரம், ஆசிரியர்கள் நியமனம், இடம் மாற்றம், இடைநிலை பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எதிர்காலம், மறு நிர்மாணிப்புகளில் உள்ள பலவீனங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் கண்டு அமைச்சு அதனை களைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் சமூகவியல் ஆய்வாளரும் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தில் தேசிய தலைவருமான ஆர்.கே. ரமணி கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

Your Comments