தமிழ் பள்ளி கல்வி பயணம் - கவிமாறன்
Educational Journey - Kavimaran
17 July 2023
உலு சிலாங்கூர், தேசிய வகை கெர்லிங் தோட்ட தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக இலக்கை நோக்கி என்ற தலைப்பில் அன்புள்ள கவிமாரனின்
கலந்துரையாடல் மாணவர்களுக்கிடையே 2 மணி நேரம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய இந்த தமிழ் பள்ளியிலே 60க்கும் மேற்பட்ட நான்காம் ஐந்து ஆறு ஆம் ஆண்டு மாணவர்களும் அந்தப் பள்ளியின் அருகாமையில் இருக்கக்கூடிய ஆசிரமத்தில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள் ஒழுக்கம், இலக்கு சமயம், கலை, கலாச்சாரம் மற்றும் உயர்க்கல்வி சம்பந்தப்படுத்திய சிறப்பான ஒரு கருத்துரங்காக இது அமைந்தது.
பல தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு கவிமாறன் கருத்தரங்கினை நடத்தி வருகிறார் அதில் நேற்று தேசிய வகை கெர்லிங் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் கவிமாறன் வழங்கினார்.