அன்பு இல்லங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்.
Extend a helping hand to the homes of love.

Date :24 April 2025 News By: RM Chandran
அன்பு இல்லங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள், முதியோர்கள்,
மற்றும் நோயாளிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அடைக்கலம் கொடுக்கும் மலாக்கா பிரசன்னா அன்பு இல்லத்திற்கு உதவும் வகையில், அண்மையில் புத்தாண்டு நல்லெண்ண விருந்து நிகழ்ச்சி Jalan Hang Tuah Hall Melaka என்ற முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவற்றுக்கு மலாக்கா இந்தியர் மற்றும் ஒற்றுமை அமைப்பு (Pertubuhan Kebajikan Dan Perpaduan India Negeri Melaka) ஆதரவு வழங்கியதாக முன்னாள் தேசிய காற்பந்து விளையாட்டாளர் ஜி.துரைராஜு தெரிவித்தார்
.
மலாக்கா மாநிலத்தில் நான்கு முதியோர் இல்லங்களை பாதுகாத்து நடத்தி வரும் மேடம் மல்லிகா, பொருளாதார ரீதியில் சிரமத்தை எதிர் நோக்கி வருவதால், அவரின் பொருளாதார சிரமத்தை ஈடுகட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
www.myvelicham.com