மோசடியால் ஏற்பட்ட பண இழப்பு அதிகம் என்றார் ஃஹ்பமி

"The loss of money due to fraud is high," Fami said

மோசடியால் ஏற்பட்ட பண இழப்பு அதிகம் என்றார் ஃஹ்பமி
மோசடியால் ஏற்பட்ட பண இழப்பு அதிகம் என்றார் ஃஹ்பமி

Date :21 Jan 2024 RM Chandran


ஃபேஸ்புக், டிக்டோக், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய நான்கு ஆன்லைன் தளங்கள்  ஏமற்றுவதற்கு மோசடி செய்வதற்கு மிகவும் பிரபலபமான இடங்களாக அடையாளம் காணப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த நான்கு தளங்களிலும் செய்யப்பட்ட மோசடிகள் மற்றும் மோசடிகளால் ஏற்பட்ட இழப்புகள் பல நூறு மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக  கூறினார்.

“2023ல், ஃபேஸ்புக் மூலமாக மட்டும் சுமார் 500 மில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த மோசடிள் தற்போது தகவல்கள் இல்லை, என்றாலும் ஒட்டுமொத்த தொகை மிகவும் பெரியது என்றார்

.

"புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் தகவல்களின்படி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் மோசடி குற்றங்கள் தவிர சமூக ஊடகங்கள் மூலமாஆக 14 வகையான மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

 காவல்துறை,தொடர்புடைய நிறுவனங்களுக்கு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க உதவும்  இதன் மூலமாக மோசடி குற்றங்கள் ஏற்படுவதைக் குறைக்க முடியும் என்று ஃஹ்பாமி கூறினார்