கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளில் குடும்ப ஒன்றுக்கூடல் நிகழ்வு
Family get-together at Kanga Pulai Tamil School
News By; Tamilan
3 Dec 2024
குடும்ப ஒன்றுக்கூடல் நிகழ்வு 2024
தேசிய கீதம் பாடி நிகழ்வை தொடங்கியது. நிகழ்ச்சி நெறியாளர் தே.தேன்மொழி வரவேற்புரையாற்ற காரைநகர் நட்புறவு மையத்தின் தலைவர் சா.திருமாறன், தலைமையுரையாற்றி நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, தலைமையாசிரியர் மாயசந்திரன்,காரை நகர் நட்புறவு மையம் ஆற்றிய சேவைகள் குறித்த ஒளிக்கீற்று காணொலி மூலமாக விளக்களித்தார்.
காரைநகர் நட்புறவு மையத்தின் தலைவர் சா.திருமாறன், பேசும் போது, வெல்னெஸ் (Wellness) குழுவிலிருந்து ஆக்னெஸ் மிஷன், உடல் ஆரோக்கியம்,உணவு முறை போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஆசிரியர்,பாலகிருஷ்ணன் திருமதி தேவகி, சக்திபிரியா ஆகியோர் இனிமையான பாடலை பாடி மகிழ்வித்தனர். மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசும் வழங்கப்பட்டது.
தொழிலதிபர் சரவணன் , கல்வி, வியாபாரம், பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார்
.
முதுகலைப் பட்டம் பெற்ற ஸ்ரீராம், மதுப்பழக்கம்,மாணவர்களின் கல்வி முறை, பெற்றோரியல் தொடர்பாக உரையாற்றினார்.செல்வன்பிரவின் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
www.myvelicham.com Face book ; myvelicham.com / You Tube ; myvelichamtv / Tik Toc ;myvelichamnews / Email ; myvelichamchennal@gmail.com Avdt Call 014-3933002