துரித உணவுகள் விருந்துபசரிப்பு பயிற்சி: மனிதவள அமைச்சின் புதிய திட்டம்
Fast Food Hospitality Training: Ministry of Manpower's New Plan
Date: 23 APRIL 2025 News By : Maniventhan
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் துரித உணவுகள் மற்றும் உணவகம் விருந்துபசரிப்பு எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்ததேறிய பயிற்சித் திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் பினாங்கு மாநில வீட்டுவசதி, சுற்றுச்சூழல், ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு அவர்களும் கலந்து கொண்டார்.
ஆறு நாள் பயிற்சிகளில் 25 பேர் பங்கேற்று பயிற்சியை முடித்துள்ளனர். இதன் மூலமாக அவர்களில் பலர் பினாங்கைச் சுற்றியுள்ள துரித உணவு உணவகங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டம் மலேசிய இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல், உணவு, குளிர் பானத் துறையில் தொழில் முனைவோராக மாறுவதற்கான அடித்தளத்த வாய்ப்பையும் வழங்குகிறது.
மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மலேசிய இந்திய சமூகத்தினரிடையே மனித மூலதன மேம்பாட்டை முன்னேற்றுவதற்கும் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்கு சுந்தரராஜூ வாழ்த்துகளை கூறினார்.
இது போன்ற முயற்சிகள், அனைவரையும் திறமையான, போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்கான அமைச்சரின் தொலைநோக்குப் பார்வையை தெளிவாக பிரதிபலிக்கிறது.
இளைஞர்களின் திறன்கள், தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை வழங்க இது போன்றத்திட்டங்கள் பல வற்றை செயல்படுத்தப்பட வேண்டுமென டத்தோஸ்ரீ சுந்தரராஜூ குறிப்பிட்டார்.
www.myvelicham.com / Face book / you tube / intg / tik tok / linkedin