கொரோனாவை கண்டறியும் செல்பேசி செயலி

  0
  140

  கொரோனாவை கண்டறியும் செல்பேசி செயலி

  கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர் யாரையேனும் சாலையில் சந்தித்துள்ளோமா என அறியும் புதிய செயலியை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

  சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம்’ எனப்படும் ‘ஆரோக்கிய சேது’ என்னும் பெயர் கொண்டஇந்த செயலி, ப்ளூடூத் மற்று லொகேஷனை வைத்து நம் அருகில் இருக்கும் நபர் கோவிட்-19 தொற்று உள்ளவரா இல்லையா என்பதை கண்டறியும்.

  நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபரிடமிருந்து 6 அடி தொலைவில் உள்ளனரா என ஆராயும்.

  இதை பயன்படுத்துபவருக்கு தொற்று பரவியிருந்தால் அல்லது அருகில் இருக்கும் யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைப் பற்றிய தகவலை இந்த செயலி அரசுக்கு தெரியப்படுத்தும்.

  Your Comments