மசெகவுக்கு மக்கள் தெளிவான ஆதரவு பிரதமர் லீ: நாடாளுமன்றத்தில் மேலும் பல மாறுபட்ட குரல்கள் ஒலிக்க வாக்காளர்கள் விருப்பம் மசெகவுக்கு மக்கள் தெளிவான ஆதரவு

  0
  40

  நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார்.

  இந்தத் தேர்தலில் தாம் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்றாலும் தேசிய அளவில் மசெக பெற்றிருக்கும் 61.24% வாக்குகள் கட்சிக்கு பரந்த அளவில் ஆதரவு இருப்பதை புலப்படுத்துவதாக அவர் கூறினார்.

  எது முக்கியம் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டுள்ளனர். தேசிய நலன்களைப் பாதுகாத்து, பலப்படுத்த அனைவரும் ஒன்றுதிரள வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் அவர்.

  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கருவூலக் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், மக்கள் செயல் கட்சி மீது சிங்கப்பூரர்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து தாம் பெருமைப்படுவதாக கூறினார்.

  கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு லீ, மக்கள் இப்போது கொடுத்துள்ள ஆதரவைப் பயன்படுத்தி கொவிட்-19 சூழ்நிலையை சமாளித்து நாட்டை நெருக்கடிநிலையில் இருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து நடத்திச் செல்லப் போவதாக உறுதியளித்தார் திரு லீகட்சியின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டார்

  Your Comments