மாணவர்களின் சிகிச்சைக்கும் கல்விக்கும் நிதியுதவிகளை செய்யுமாறு வேண்டுகோள் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.

Financial assistance for the treatment and education of students... Datuk Seri Sundararaju Somu.

மாணவர்களின் சிகிச்சைக்கும் கல்விக்கும் நிதியுதவிகளை செய்யுமாறு வேண்டுகோள்     டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.
மாணவர்களின் சிகிச்சைக்கும் கல்விக்கும் நிதியுதவிகளை செய்யுமாறு வேண்டுகோள்     டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.

Date :27 Feb 2025 News By :Rm Chandran 

மாணவர்களின் சிகிச்சைக்கும் கல்விக்கும் நிதியுதவிகளை
செய்யுமாறு அன்பான  வேண்டுகோள் விடுத்தார் 
டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.

கடந்த 18-2-2025  ஆம்  நாள் நடக்கக் கூடாத   சம்பவம்  ஒன்று நடந்து .  விட்டது. அவை என்னவெனில் அண்ணனும்  தங்கையும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்களின் பாட்டி   அவர்களை  மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது விபத்து  ஏற்பட்டு விட்டது.

பள்ளியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவன் 2வது நாளில்  விபத்து ஏற்பட்டு அவரது கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அவரின் தங்கை பாலர் பள்ளி பள்ளிக்குச்சென்று 2வது நாள் மாணவிக்கு  வலது காலில் மிகவும் மோசமாக அடிபட்டு முழங்கால் அகற்றும் நிலை நேர்ந்துள்ளது. என்னுடன் பினாங்கு மாநில கல்வி அதிகாரி துவான் சஜாலி, பள்ளி தலைமையாசிரியர் சந்திரவதனி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரிடையாகச்சென்று  நிலைமைகளை கேட்டறிந்தோம்.

 பினாங்கு மாநில அரசாங்க பார்வையில் அனைத்து  தமிழ்ப்பள்ளிகளும் இருப்பதால் திரையில் காணும் வங்கி எண்களுக்கு அந்த மாணவர்களின் சிக்ச்சைக்கும்
கல்விக்கும் நிதியுதவிகளை வழங்குமாறு  மாநில சுற்றுச்சூழல் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு  டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு அனைத்து நல்லுள்ளங்களையும் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வங்கி எண்ணில் பொது மக்கள் நிதி உதவிகளை செய்யும்படி அன்பான வேண்டுகோள் விடுத்தார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான
மாண்புமிகு டத்தோஸ்ரீ  சுந்த்தரராஜு சோமு அவர்கள்.