தொழிலாளர்கள் தங்கும் வளாகம் அசுத்தமாக இருந்ததால் அபராதம்
Fines as the premises where the workers are staying are dirty
ஷா ஆலம், 30May 2023
கடந்த வியாழன் அன்று, புக்கிட் காபாரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அதன் தொழிலாளர்கள் தங்கும் வளாகம் அசுத்தமாகவும், சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் அபராதம் வழங்கப்பட்டது.
போர்ட் கிள்ளான் மனிதவளத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் நகராண்மை கழக தலைவி நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கையானது நிர்வாகத்தால் வழங்கப்படும் தங்குமிடம் சட்டம், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் களுக்கு இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் இன்று கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.
தொழிலாளர் தங்குமிடச் சட்டம் (சட்டம் 446) மற்றும் தொழிலாளர் சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் ஆறு விசாரணை ஆவணங்களும் இந்த நடவடிக்கையில் வெளியிடப்பட்டதாக நோரைனி கூறினார்.
“இந்த சோதனை நடவடிக்கை வருடத்திற்கு மூன்று முறையாவது நடைபெறும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
www.myelicham.com Generation Young News Potal