கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது நட்பு இயக்கம்
Friendship movement focuses on educational development
Date :14 Feb 2025 News By:Maniventhan
தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்களால் அமைக்கப்பட்ட இயக்கம் தற்போது தமிழ்ப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளில் கல்விக் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை களைவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சு.ராமச்சந்திரன், பொன்.பெருமாள் தெரிவித்தனர்.
நட்பு இயக்கத்தில் நூறு பேர் அங்கம் வகிப்பதாகவும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்றி வருவதாகவும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையை தற்போது முடுக்க விட்டிருப்பதையும் குறிப்பிட்டனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கு கேளிக்கை சந்தை நடத்தி வருவதாகவும் வசூலிக்கப்படும் பணம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியை இயக்கம் கண்காணித்து வருகிறது.
தமிழ்ப்பள்ளி நிர்வாகம் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மேலாளர் வாரியம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ராமச்சந்திரன், பொன்.பெருமாள் நன்றி தெரிவித்தார்.
www.myvelicham.com Advt :014-3933002