மலேசிய காற்பந்து துறையில் கால் பதித்தவர் ஜி.துரைராஜ்.
G. Durairaj is the man who set foot in the Malaysian football industry.
22 Dec 2024 News By- RM Chandran
போர்டிக்சன், சுவா பெத்தோங் தோட்டத்து மண்ணின் மைந்தரான ஜி.துரைராஜ் காற்பந்து துறையில் கால் பதித்து மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். தோட்டங்களில் நடத்தப்பட்ட அறுவர் காற்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சுவா பெந்தோங் தோட்டத்திற்கு பெருமை சேர்த்ததாக அத்தோட்டத்து பால் மரம் சீவும் தொழிலாளியான ஜி.துரைராஜ் தனது இளமை கால அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
21 விளையாட்டாளர்களை தேர்ந்து எடுத்தில் நான் மட்டுமே தமிழன்.21 பேரும் ஜெர்மன் நாட்டுக்கு சென்று ஒரு மாதம் பயிற்சி எடுத்தோம்...
1976 ல் மலேசிய கேம் பி. குழுவிலும் 1978ல் ஏ குழுவுக்கு விளையாடி சாதனை புரிந்தவர், மலாக்காவில் துணை பயிற்றுனராக இரண்டு ஆண்டும், தலைமை பயிற்றுனராக ஐந்து ஆண்டும் பணியாற்றி சிறந்த காற்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கியவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார்
.
மூத்த மகன் நோர்வே'யில் தோல் மருத்துவ நிபுணராகவும் மகள்,
சபா மாநிலத்தில் மருத்துவராக பணியாற்றி வருவதை
ஜி.துரைராஜ் குறிப்பிட்டார். 'காற்பந்து விளையாட்டு என்றால் தனக்கு உயிர்,
என்று கூறும் ஜி.துரைராஜ், தற்போது ' மலாக்கா மாநில இந்திய மற்றும் ஒற்றுமை அமைப்பு' மூலமாக அரசுசாரா அமைப்பை அமைத்து வறுமை நிலை மக்களுக்கும் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உதவி செய்து வருவதாகவும்
ஒவ்வொரு மாதம் இவற்றுக்காக 6 ஆயிரத்து ஐநூறு வெள்ளியை செலவிடுவதாகவும் ஜி.துரைராஜ் தெரிவித்தார். அவரின் மனித நேய உதவிகளை கண்டு மை வெளிச்சம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டது.
செய்தி ஆக்கம்: ஆர்.எம்.சந்திரன்.
www.myvelicham.com Face book - TIK TOK- You tube -