பித்ரு தோஷங்கள் அடியோடு நீங்க ஆடி அமாவாசை..

Get rid of pitru doshas completely Audi Amavasai..

பித்ரு தோஷங்கள் அடியோடு நீங்க ஆடி அமாவாசை..
பித்ரு தோஷங்கள் அடியோடு நீங்க ஆடி அமாவாசை..

News By: Jayarathan Date : 07 August 2024 

பித்ரு தோஷங்கள் அடியோடு நீங்க
ஆடி அமாவாசை..

ஆடி மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிறது.. அதற்கு காரணம் இந்த மாதம் முழுவதும் இறைவழி
பாடும் ஆன்மீக விழாக்களும் விஷேசங்களும் நிறைந்திருக்கும்..
அதில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை.ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசை அன்று நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். இறந்த முன்னோர்களின் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.

சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்று வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும். பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விடலாம் என்று கூறுகின்றனர் அர்ச்சகர்கள்.

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய்காரகள் சத்திரன், தந்தைகாரகன் சூரியனுடன் இணைகிறார். சத்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்
கிழமையிலும், கர்மகாரகன் என சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி ஆடி அமாவாசை அமைகிறது. இதனால் இது தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த தர்ப்பண காரியங்களை நாம் கர்ம வினைகளால் நாம் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும், அவற்றை நீக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும் நிலையை கொடுக்கும் என்பதாலேயே காகத்திற்கு அமாவாசை நாளில் உணவு வைக்கப்படுகிறது. அமாவாசை பலனாக  பித்ரு தோஷங்கள் ஆயுள் விருத்தி. கண்டாதி தோஷம் விலகும். பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும்

.

அமாவாசை தினமான ஆடி அமாவாசை  திதி, ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது. ஆகஸ்ட் 04ம் தேதி பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர்களுக்கு இலை போட்டு, படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு பிறகு படையல் போட்டு வழிபடுவது சிறப்பானதாகும். காகத்திற்கு சாதம் வைப்பதும் பகல் 01.30 மணிக்கு பிறகு வைப்பது சிறப்பானதாகும்.கர்ம வினைகளால் நாம் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும், அவற்றை நீக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும் நிலையை கொடுக்கும் என்பதாலேயே காகத்திற்கு அமாவாசை நாளில் உணவு வைக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை முன்னோர்களிடம் மன்னிப்புக் கோரவும், அதன் மூலம் எதிர்கால வெற்றி மற்றும் செழிப்புக்காக அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் வழிபடபடுகிறது.

www.myvelicham.com   -  MyNews MyMedia- Publicity, Sales ,Marketing , coprate video Productions Life Screaming and Advertisment 

 face book:myvelicham.com /Youtube : myvelichamtv  / Tic tok myvelichamtv /Titter :myvelichamtv / Intg : myvelichamtv 

Email: myvelichamchennal@gmail.com / whats app: 018-2861950