கோலக்குராவ்  தேசிய வகை  செர்சோனிஸ் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா

kuala kurau  National Category Chersonis Garden Tamil School Prize Giving Ceremony

கோலக்குராவ்  தேசிய வகை  செர்சோனிஸ் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா
கோலக்குராவ்  தேசிய வகை  செர்சோனிஸ் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா

News By : RM. Chandran Date :15 Jan 2025

பேராக்,கோலக்குராவ் 
தேசிய வகை  செர்சோனிஸ் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தோட்ட மேலாளர் நாதன் கண்ணன், தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிக்ழ்வில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சமூக இலாகா பொது நல ஆர்வலருமான துவான் ஹாஜி முகமட் ஹாபீஸூம்  கலந்து கொண்டார். 

நிகழ்வில்  சிற்பபுரையாற்றிய தோட்டத்தின் மேலாளர் நாதன் கண்ணன் அவர்கள்,1ஆம் ஆண்டு தொடங்கி 6ஆம் ஆண்டுவரை தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள் இடைநிலை பள்ளியிலும் சிறப்பாக கல்வி கற்று சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

அவ்வாறு சிறந்த அடைவு நிலையை பதிவு செய்யாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். திவேட் தொழில் கல்வி, இன்னும் பல்வேறு வகையான தொழில் பயிற்சி கூடங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. அதற்கான பயிற்சிகள் வழங்குவதோடு குறிப்பிட்ட அளவு  இலவச அலவன்ஸை தங்குமிட வசதிகளை வழங்கி வருகிறது. அவற்றில் இணைந்து கொண்டு  தொழில் கல்வியை  கற்றுக்கொண்டு வாழ்க்கையில் சிறப்பாக வாழ வேண்டும் என்று நாதன் கண்ணன் கேட்டுக்கொண்டதோடு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும்
எடுத்து வழங்கி மாணவர்களிடையே
ஒரு விழிப்புணர்வையும்  ஏற்படுத்தினார்.