நெகிரி செம்பிலானில் 11 தொகுதிகளில் ஜசெக போட்டி- குணசேகரன், வீரப்பன், அருள் குமாருக்கு வாய்ப்பு
Gunasekaran, Veerappan, Arul Kumar likely to contest in 11 constituencies in Negeri Sembilan
25 July 2023
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் ஒரு புதுமுகம்
உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் பெயரை ஜசெக நேற்றிரவு வெளியிட்டது.
இந்த தேர்தலில் நீலாய் தொகுதியில் ஜே. அருள்குமாரும் சிரம்பான் ஜெயா தொகுதியில் பி. குணசேகரனும் ரெப்பா தொகுதியில் எஸ்.வீரப்பனும் மீண்டும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜசெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சியின் தலைமைச்
செயலாளர் அந்தோணி லோக், இத்தேர்தலில் சென்னா சட்டமன்றத்
தொகுதியைத் தாம் மீண்டும் தற்காத்துக் கொள்ளவுள்ளதாகக் கூறினார்.
ரஹாங் தொகுதியில் புது முகமான டெஸ்மண்ட் சியான் மியோவ்
போட்டியிடவுள்ள வேளையில் பகாவ் தொகுதியில் தியோ கோக்
சியோங்கும் லோபாக் தொகுதியில் சியு செ யோங்கும், மம்பாவ்
தொகுதியில் யாப் இயோ வேங்கும் லுக்குட் தொகுதியில் சூ கெ
ஹூவாவும் களம் காண்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
share Our www.myelicham.com News