உண்மைக்கு புறம்பானவை ஆதாரமற்றவை என்று ஹான்னா இயோவ் கூறினார்.
Hannah says untrue and baseless Yeow said.
News By : RM Chandran Date : 09 Jan 2025
பிகமிங் ஹன்னா: எ பர்சனல் ஜர்னி (becoming Hannah:A Personal Journey) என்ற தலைப்பில் ஹான்னா இயோவின் புத்தகத்திற்கு எதிரான விசாரணைக்கு உதவும் வகையில் 59 நபர்களிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 182 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா ( Ruadi Mohd Isa) தெரிவித்தார்.
"இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோவின் வாக்கு மூலம் இன்னும் எடுக்கவில்லை, அதற்கான தேதி எதுவும் நிர்ணயிக்கவில்லை."
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படும் இந்த புத்தகத்தை தடை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி, பல குழுக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான்ஸ்ரீ மூசா ஹாசனுக்கு எதிரான அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இயோவ் பதவி விலக வேண்டும் என்று குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஹான்னா இயோவ், கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை, அறிக்கைகள் அவதூறாக இருப்பதை நிரூபிக்க தவறிவிட்டார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜனவரி 30 ஆம் நாள் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் (Universiti Teknologi Mara) நடந்த ஒரு பரப்புரையின் போது மூசாவின் கருத்துக்கள் தொடர்பாக இயோவ் 2020 ஆம் ஆண்டில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.
மலேசியாவை கிறிஸ்தவ தேசமாக மாற்றுவதற்காக தனது புத்தகத்தை எழுதியதாக மூசா பொய்யாகக் கூறி, இஸ்லாம் மற்றும் மலேசியாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக மதப்பிரச்சாரகர்கள் மற்றும் யூதர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.மேலும் தேசத்தின் மீதுள்ள தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத்தவறி விட்டார் என்று கூறப்பட்டது.
அந்த அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்றும் ஹான்னா இயோவ் தெரிவித்தார்.
www.myvelicham.com Face Book / Tik Tok / You Tube - Google