தன் மகனுக்கு நீதி வேண்டும் ஒரு தாயின் மனக்குமுறல் டத்தோ டாக்டர் அ.கலைவாணர்
He wants justice for his son. A mother's resentment.Dato Kalaivanar

Date : 09 April 2025 News By: 09 April 2025
கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசா பகுதியில் கடந்த 15-3-2025 ஆம் நாள் இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தமது மகன் ஜீவா கருப்பையா வயது 36 அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு அகால மரமடைந்தார்.அவருக்கு நீதி வேண்டும் என்று அவரது தாயார் மாரியம்மா கிருஷ்ணன் வயது 62 கூறினார்.
தாமான் ஸ்ரீ செந்தோசா பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அரசு சாரா இயக்கத்திடம் வந்து முறையிட்டதாக டத்தோ டாக்டர் அ.கலைவாணர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
நம் மலேசிய காவல் துறையினரை நாம் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யுமாறு காவல் துறையை கேட்டுக் கொள்வதோடு இவற்றை காவல் துறைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின்
(IGP Tansri Razarudin Ismail ) பார்வைக்கு கொண்டு போவதாக
இன்று பிரிக்பீல்ட்ஸில் அரசு சார இயக்கம் ( NGO) ஏற்பாட்டில்நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை வகித்த டத்தோ டாக்டர் கலைவாணர் தெரிவித்தார்.
இதனிடையே நோயாளியான சம்பந்தப்பட்ட தனித்து வாழும் அந்த ஏழை தாயை பார்த்து ஆறுதல் கூறவும் அவர்களை வந்து பார்க்கவும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ், கோத்த ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் வேளாண் துறை அமைச்சர் மாட் சாபு (Mat Sabu) இது வரையிலும் சென்று காணவில்லை என்றும் டத்தோ,டாக்டர் கலைவாணர் குறிப்பிட்டார்.
இப்படியொரு அராஜாகச்செயல் அவர்களது தொகுதியில் நடந்துள்ளது இவர்கள் இருவரும் கண்டு கொள்ளமல் இருப்பதை மக்களும் பாரத்துக்கொண்டுதான்
இருக்கிறார்கள் என்றார்.
மகனை பரிகொடுத்த அந்த தாயாரின் நெஞ்சுருகி அழுத விதம் மனதை நோகச்செய்தது. நம்பிக்கை டத்தோ,
டாக்டர் அ.கலைவாணர் அந்த தாயாரின் நிலையறிந்து நிதி உதவியும் வழங்கினார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் நீதி மன்றம் கொண்டு செல்வர் என்றும் டத்தோ,டாக்டர் அ.கலைவாணர் நம்பிக்கை தெரிவித்தார்.
www,myvelicham.com Face book /Tik Tok / Ing / You Tube / Google