இந்திய இளைஞர்களுக்காக உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் பயிற்சி
High Powered Motorcycle Training for Indian Youth
Date : 21 March 2025 News By:Maniventhan
சூப்பர் பைக் என்றழைக்கப்படும் உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் பராமரிப்பில் விரிவான திறன்களை வழங்குவதற்கு வடிவமைக்கப்படதாகவும் மனிதவள அமைச்சின் மிசி எனப்படும் இந்திய அமைச்சு தெரிவித்துள்ளது
.
எந்த திறமையும் இல்லாத அனைத்து தரப்பினருக்கும் இது திறக்கப்படதாகவும் இந்தப் பயிற்சி இரண்டு அணுகுமுறைகளை உள்ளடக்கியதாக குறிப்பிட்டது.
பங்கேற்பாளர்கள் இயந்திர பாதுகாப்பு , இயந்திர அமைப்பு, மின்சாரம் மற்றும் தடுப்பு பராமரிப்பு நுட்பங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
பயிலரங்கில் பங்கேற்பவர்கள் குறிப்பிட்ட கால சேவை நுட்பங்கள், அடிப்படை பழுது பார்ப்பு, சரிசெய்தல் மற்றும் சூப்பர் பைக் பராமரிப்பில் தேவைப்படும் சிறப்பு கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
சூப்பர் பைக் ஆர்வலர்கள், அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் பராமரிப்பை பொழுது போக்காகவோ அல்லது தொழில் ரீதியாகவோ கற்றுக்கொள்ள விரும்பும் தனிநபர்கள் உட்பட அனைவருக்கும் இப்பயிற்சி பொருத்தமானது.
அண்மையில் ஜோகூரிலுள்ள இஸ்கந்தர் புத்ரியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்பாளர்களுக்கு சூப்பர் பைக் பராமரிப்பு, பாகங்களை நேரடியாக பொருத்துதல், சூப்பர் பைக் பராமரிப்பு கருவிகள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று அமைச்சு தெரிவித்தது.
www.myvelicham.com face book / tik tok / you tube