மக்களை வீடு வீடாகச்சென்று நலம் விசாரித்து ஆதரவு கேட்டார் கே.எஸ்.பவானி.

House to house enquiring about people's well-being and asking for support K.S. Bhavani.

மக்களை வீடு வீடாகச்சென்று நலம் விசாரித்து ஆதரவு கேட்டார் கே.எஸ்.பவானி.

Date :21 April News By: RM Chandran 
பேராக் ,ஆயர் கூனிங் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த வழக்கறிஞர் கே.எஸ். பவானி, ஆளும் தரப்பினருக்கு  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு இதை ஒரு சிறந்த வாய்பாக வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

தேர்தல் சமயத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவாதாக கூறும் ஆளும் தரப்பினர்,  இது நாள் வரை எங்கே போனார்கள் என்றார்.
ஆயர் கூனிங் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தாப்பாவின் மேம்மாட்டுத் திட்டங்களை அறிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார். இப்றாஹிம் கூறுகிறார்.ஆனால் இங்குள்ள அடிதட்டு மக்கள் வாங்கும் அளவில் வீடமைப்பு திட்டங்கள் இருப்பதை வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் Nga Nor Ming உறுதி செய்வாரா ? என்றும் மண்ணின் மைந்தரான வழக்கறிஞர் கே.எஸ். பவானி  கேள்வி எழுப்பினார்.