போராடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் தியாகராஜ் சங்கர நாராயணன்.
I am ready to fight Thiagaraj Sankara Narayanan.
பினாங்கு வடகிழக்கு மாவட்டத்தின் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சி என்றார் தியாகராஜ்.
போதைப்பொருள் வினியோகம் என்பது நாடு எதிர்கொள்ளும் மிகவும் சவாலான சுகாதார சமூகப் பிரச்சனையாகும்.
70களில் இருந்து இந்தப் பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டது. ஆனால், கண்டிக்கும் தடுக்கும் அளவுக்கு எந்தப்பலனும் முயற்சியும் நல்ல மாற்றத்தைக் காட்டவில்லை.
வடகிழக்கு மாவட்ட ஜே.கே.பி.டி தலைவர் இளங்கோ, பார்த்திபன்,
ஆகியோருடன் இணைந்து இதை தடுக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறினார் எல்.தியாகராஜ்.
முன்னாள் சிறை அதிகாரியாக 17 1/2 வருடங்கள் சேவையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பான விஷயத்தை முழுமையாக புரிந்துகொண்டதாகக் கூறிய தியாகராஜ்,
பிள்ளைகள், இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சு கையாள வேண்டும்.
எனக்குக் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, இந்த விஷயத்தில் போராடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்று கூறினார் என் மண் என் மக்கள் தியாகராஜ் சங்கர நாராயணன்.