எப்போதும் மலேசியா கபடி சிலம்பம் விளையாட்டு போட்டிக்கு பாக்கபலமாக இருப்பேன்.... சிவகுமார்
I will always be a part of Malaysia Kabaddi Silambam. Sivakumar

16 June 2023
வருங்காலத்தில் சீ விளையாட்டு போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு மலேசிய சிலம்பக் கழகமும் மலேசிய கபடி சங்கமும் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு பக்கப்பலமாக இருந்து முழு ஆதரவு வழங்குவேன் என மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் இன்று அறிவித்தார்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் கபடியும் சிலம்பமும் சரவாக் சுக்மா போட்டியில் இடம் பெற்றுள்ளது.
அதேசமயம் இனி வரும் காலங்களில் இவ்விரு போட்டிகள் சீ விளையாட்டு போட்டியில் இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆசியா விளையாட்டு போட்டியில் கபடி இடம் பெற்றுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீ போட்டியில் பங்கேற்கும் நாடுகள் மத்தியில் சிலம்பம் மற்றும் கபடி போட்டியை பிரபலப்படுத்த கபடி சங்கமும் சிலம்பக் கழகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆசியான் நாடுகளின் ஆதரவையும் பெற முடியும்.
இதற்கான அடிப்படை வேலைகளில் சிலம்பக் கழகமும் கபடி சங்கமும் இணைந்து திட்டங்களை வகுத்து செய்ல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்விரு சங்கங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பக்கப்பலமாக இருந்து முழு ஆதரவு கொடுப்பேன் என்று ஜெனிவா பன்னாட்டு தொழிலாளர் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.