இனி தமிழ்மொழி இல்லாத தமிழ் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பேன்'.மாண்புமிகு அ.சிவனேசன்..

I will ignore Tamil programs without Tamil language. Honorable A. Sivanesan..

இனி தமிழ்மொழி  இல்லாத தமிழ் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பேன்'.மாண்புமிகு அ.சிவனேசன்..

News By: Ganapathy

19 Sept 2024 -'இனி தமிழ்மொழி  இல்லாத தமிழ் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பேன்' என்று சொல்லித்தமிழைப் புறக்கணிப்பவர் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறார் மாண்புமிகு அ.சிவனேசன்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொன்னால்தான் கொஞ்சம் காது கொடுத்துக்கேட்கிறது நமது இனம். மானியம்,நிதி, உதவி, அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் எனும் அச்சம் காரணமாக  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமிழுக்கு உரிய இடத்தை வழங்க முன்வருவதில்லை தமிழர்கள், இந்தியர்கள் நடத்துகின்ற பல வணிக நிறுவனங்கள்,  உணவகங்கள் உட்பட  தமிழ் மருந்துக்கும் அங்கு இல்லை. இதையும் மாண்புமிகு அ.சிவனேசன்  கண்டித்திருக்கிறார்..

 மாண்புமிகு அ.சிவனேசன் அவர்கள் தமிழுக்கும் நேசன் என்பதை உறுதிபடுத்தி உள்ளார்.
அவரை வாழ்த்துவோம். அவரைப்போல் மற்ற அரசியல்வாதிகளும் செயல்பட்டால் தமிழும் இந்த நாட்டிலே தழைக்கும் செழிக்கும் வளரும் என்பது உறுதி.


Remark ;செய்திகள் 4புகைப்படங்கள்,1நிமிட 2video,செய்திச்சுருக்கத்துடன் எழுதி அனுப்பலாம் Email:myvelichamchennal@gmail.com WhatsApp 018-2861950