தவறாக நடந்துக் கொள்ளும் போலீஸ்கார்களை நான் கடுமையாகத் தண்டிப்பேன். ஜோகூர் காவல்துறை கமிஷர் டத்தோ எம். குமார்
I will severely punish the misbehaving policemen. Johor Police Commissioner Datuk M. Kumar
Date : 28 Feb 2025 News By:Ganapathy
தவறாக நடந்துக் கொள்ளும் போலீஸ்கார்களை நான் கடுமையாகத் தண்டிப்பேன். ஜோகூர் காவல்துறை கமிஷர் டத்தோ எம். குமார் சபதம்
“அதிகாரிகளிடையே தவறான நடத்தைகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்களை எடுப்பதில் தயங்காமல் மாட்டேன்” என்று நேற்று ஜோகூர் காவல்துறை தலைவர் கமிஷர் டத்தோ எம். குமார் எச்சரித்துள்ளார். காவல் துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் எந்தவொரு குற்றச் செயலும் தாம் இனி அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
போலீஸ் துறை ஓர் உயர் தரத்தை அடையவதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டப்பட்டாலும், ஒருசில போலீஸ்கார்களின் அராஜகச் செயல்களாலும், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களாலும், காவல்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஜோகூர் காவல்துறை கமிஷர் டத்தோ எம். குமார் கூறினார். “இதுபோன்ற இவர்களின் அராஜங்களை முறியடிப்பதற்கு, நான் அவர்களை நீதிமன்ற நடவடிக்கைக்குக் எடுத்துச் செல்லவும் தயங்க மாட்டேன்” என்று ஜோகூர் காவல்துறை தலைமையதிகாரி கமிஷனர் டத்தோ எம். குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே நிலவிவரும் தவறான நடத்தை மற்றும் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளால் தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளாகக் தெரிவித்தார்.
“இதனைத் திறமையான, மற்றும் கூர்ந்த கண்காணிப்பின் மூலம் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அது காவல் துறையை பாதிக்கக்கூடிய புற்றுநோயாக உருவெடுத்துவிடும்” என்று, நேற்று வியாழக்கிழமை (பிப் 27) மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்தாண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 23 அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை மேலும் 3 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
போதைப் பொருள் வைத்திருத்தல், மிரட்டி பணம் பறித்தல், கற்பழிப்பு, கிரிமினல் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை போன்ற குற்றச்சாட்டுக்களில் இவர்கள் இந்தக் குற்றங்களை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மீது (நடத்தை மற்றும் ஒழுக்கம்) விதிமுறைகள் 1993, விதி 3C-இன்கீழ் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிவரும் காலக்கட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால், காவல்துறை அதிகாரிகளின் எந்தவோர் உயர்பதவியில் இருந்தாலும், குற்றங்கள் நீதிமன்றம்வரை சென்றால்கூட, நீதிமன்றத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் ஜோகூர் காவல்துறை தலைமையதிகாரி கமிஷனர் டத்தோ எம். குமார் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.