திருக்குறளை படித்து வந்தால் வாழ்க்கையில் நன்னெறியோடும் பண்போடும் வாழலாம்

 If you study Thirukkural, you can live your life with virtue and decency Dato Gopalakrishnan

 திருக்குறளை படித்து வந்தால் வாழ்க்கையில் நன்னெறியோடும் பண்போடும் வாழலாம்
 திருக்குறளை படித்து வந்தால் வாழ்க்கையில் நன்னெறியோடும் பண்போடும் வாழலாம்

News By -  Rm Chandran  02 Jan 2025

காப்பார்,  தேசிய வகை மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளியில் 'உலகத்திருக்குறள்  நாள்.

 மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் காப்பார் நடுவத்தின் ஏற்பாட்டில் 'உலகத் திருக்குறள்  நாள்' காப்பார், தேசிய வகை மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

.

நிகழ்ச்சிக்கு  சிறப்பு வருகை புரிந்த உலகத்தமிழர் பண்பாட்டு
 மன்றத்தின் தலைவர்  டத்தோ டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்கள்  நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் தமதுரையில்,திருக்குறள் பல்வேறு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட உலகப்பொதுமறை நூல் என்று போற்றப்படுகிறது.
நாம் தினமும்  ஒரு  திருக்குறளை படித்து வந்தால் வாழ்க்கையில் நன்னெறியோடும் பண்போடும் வாழலாம்.

 இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு நீங்களே
முன்னுதாரணமாக விளங்க வேண்டும். இந்த அர்த்தமுள்ள நிகழ்வை ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பாடு செய்த  மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் காப்பார் நடுவம் ஏற்பாட்டுக்குழுவினருக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்
டத்தோ டாக்டர் ம.கோபாலக்கிருஷ்ணன்
தெரிவித்துக் கொண்டார்.

www.myveliccham.com Face book Myvelicham.com Tik Tok Myvelichamnews