ஈப்போவில் சட்டவிரோத டீசல் எண்ணெய் சேமிப்பு இடமாக மாறிய கார் பட்டறை?
Illegal diesel oil storage facility in Ipoh Turned car workshop?

28 March 2025 News By Rajen
ஈப்போவில் சட்டவிரோத டீசல் எண்ணெய் சேமிப்பு இடமாக
மாறிய கார் பட்டறை?
இங்குள்ள அஞ்சோங் தாவாஸ் சினாரான்
எனும் ஒரு கார் பட்டறையை சட்டவிரோத டீசல் எண்ணெய் சேமிப்பு இடமாக மாற்றியதை பேராக் உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு கண்டு பிடித்து
அவ்விடத்தில் சோதனை நடத்தி ஐயாயிரம் லீட்டர்
எண்ணெயை பறிமுதல் செய்தது.
சென்ற செவ்வாய்க்கிழமை மேற் கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் கார் பட்டறை உரிமையாளர் என
நம்பப்படும் 59 அகவை நிரம்பிய ஆடவரை தடுத்து வைத்து வாக்கு மூலத்தை பதிந்து கொண்டதாக
அதன் பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.