சட்டவிரோத சூதாட்ட மையங்கள்  ஜோகூர் மாநிலத்தில் துடைத்தொழிக்கும் நடவடிக்கை கமிஷனர் குமார்

Illegal gambling centres wiped out in Johor state, says commissioner Dato Kumar

சட்டவிரோத சூதாட்ட மையங்கள்  ஜோகூர் மாநிலத்தில் துடைத்தொழிக்கும் நடவடிக்கை கமிஷனர் குமார்
சட்டவிரோத சூதாட்ட மையங்கள்  ஜோகூர் மாநிலத்தில் துடைத்தொழிக்கும் நடவடிக்கை கமிஷனர் குமார்

Date : 05 March 2025 News By: Ganapathy

ஜோகூர் காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை முற்றாகத் தடுக்கும் நடடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், மாநில மின்சார அலுவலகத்துடன் (TNB) இணைந்து அனைத்து சூதாட்ட மையங்களிலும் மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளது. 

இந்நடவடிக்கை தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட வணிக உரிமைங்களையும் ரத்துச் செய்துள்ளது என்று ஜோகூர் காவல்துறை தலைவர் கமிஷனர் டத்தோ எம். குமார் நேற்று பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

    இஸ்கந்தார் புத்திரி, வடக்கு -தேற்கு ஜோகூர்,  கோத்தா திங்கி,  மூவார், பத்துப் பகாட், கோத்தா திங்கி, மூவார், பொந்தியான், குளுவாங், மெர்சிங், மூவார், தங்காக் ஆகிய இடங்களில் இயங்கி வந்த சூதாட்ட மையங்களின் உரிமங்கள் அந்தந்த உள்ளூர் அதிகாரிகளால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை கடந்த 2024ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என்றும், அதன் தொடர் நடவடிக்கையாக, இப்பொழுது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் மாநில காவல்துறை கமிஷர் டத்தோ எம் குமார் அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.

www.myvelicham.com / face book / tik tok