SPM தேர்வில், 14,179 மாணவர்கள் நேர் - ‘A’ எடுத்துள்ளனர். கல்வி அமைச்சு அறிவிப்பு

In the SPM exam, 14,179 students have taken a straight 'A'. Ministry of Education Announcement

SPM தேர்வில், 14,179 மாணவர்கள் நேர் - ‘A’ எடுத்துள்ளனர். கல்வி அமைச்சு அறிவிப்பு

Date : 25 APRIL 2025  News By: Ganapathy Krishnasamy

கடந்தாண்டு SPM (Sijil Pelajaran Malaysia) தேர்வை எழுதிய மொத்த மாணவர்களில் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. 

மாணவர்கள் தேசிய மொழி மற்றும் வரலாற்றில் தேர்ச்சிப் பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கிய பின்னர், இந்த ஆண்டு இந்த முடிவுகள் கடந்த 11 ஆண்டுகளை விட மிகச் சிறந்த தேர்ச்சி முடிவுகளை எடுத்துள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் தெரிவித்தார். 

14,179 நேர் ‘A’ மாணவர்களின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டின் எஸ்பிஎம் முடிவுகளில் பதிவு செய்யப்பட்ட 11,713 மாணவர்களை விட அதிகரிததுள்ளது என்று உத்துசான் மலேசிய தெரிவித்துள்ளது.

 

ஒட்டுமொத்த தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டில் 131,489 இருந்து 136,791 ஆக அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் 8,676-ஆக இருந்த தேர்வாளர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு 6,246 ஆக குறைந்துள்ளது என்றும் அஸமான் தெரிவித்தார்

நன்றி. உத்துசான் மலேசியா