எங்கே போனார்கள் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
Indian Where have our MPs gone?
News By : RM Chandran Date :10 Jan 2025
தேசிய வகை செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் கட்டுமானப்பணி தேவைதானா? என்று பெற்றோர்கள் போர் கொடி உயரத்தி உள்ளனர் இவற்றுக்கு இது வரை எந்த நாடாளுமன்ற உறுப்பினருமே பேசவில்லை கண்டு கொள்ளவில்லை.
நமக்கு முழு அமைச்சர் இல்லாத நிலை அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் நடந்துள்ளது. எது எதற்கோ டிக் டாக் செய்யும் அரை வேக்காடுகள் இவற்றுக்கு குரல் கொடுக்காமல் ஓடி ஒழிந்துக் கொண்டு இருக்கிறார்களே?
தமிழ் உணர்வு உள்ளவர்கள் இருந்தால் குரல் கொடுங்கள்.
இங்கே நாம் போராடியே எதையும் சாதிக்க வேண்டியுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களத்தில் இறங்கி தேசிய வகை செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.