வாக்காளர்கள் அதன் சின்னங்களை பார்த்தே வாக்களிக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கே.எஸ்.பவானி

Its symbols for voters They vote by looking at Advocate K.S.Bhavani

வாக்காளர்கள் அதன் சின்னங்களை பார்த்தே வாக்களிக்கிறார்கள் என்று வழக்கறிஞர் கே.எஸ்.பவானி

Date 20 April 2025 News By:Chandran 


நீண்ட காலமாகவே அந்தக் கட்சிகளின் சின்னமே வாக்காளர்கள்  மத்தியில்  பதிந்து போனதால் மூத்த குடி மக்கள் அதனை விட்டு வெளி வருவதில்லை,ஆனால் இளைய தலைமுறையினர்  அவ்வாறு இருக்க கூடாது என்று தெளிவு படுத்தினார் ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் கே.எஸ். பவானி.

இளைஞர் எதையும் சீர்த்தூக்கிப் பார்த்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டு கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்து விட்டனர். ஒன்றுக்கொன்று எவ்விதமான முன்னேற்றத்தையும் மக்களுக்குகொண்டு வர வில்லை  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறை வெற்றி வில்லை என்றார்.

அதே வேளை ஆயர் கூனிங் பகுதி எந்த வகையிலும் முன்னேற்றம் அடைய வில்லை ஆனால் இங்கு மேற்கொள்ளப்படும் வீட்டுடமை திட்டத்தின் வீடுகளின் விலை மக்கள் வாங்கும் நிலையில்  இல்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர வேண்டும் என்று கூறிய பவானி,

 மலிவு விலை வீடுகளை கூட இப்போது மாநில அரசாங்கம் கட்டுவதில்லை அவ்வாறு இருக்கும் போது பி.40 தரப்பு மக்கள் எவ்வாறு சொந்த வீடுகளை வாங்குவர் என்றும் வழக்கறிஞர் கே.எஸ். பவானி கேள்வி எழுப்பினார்.

www.myvelicham.com