உலுலங்காட் மாவட்ட  தமிழ்ப்பள்ளிக்கு இடையிலான கபடிப்போட்டி

Kabaddi match between Ulu langat district  Tamil schools

உலுலங்காட் மாவட்ட  தமிழ்ப்பள்ளிக்கு இடையிலான கபடிப்போட்டி

News By: RM Cahandran

22 August 2024  - கபடிப்போட்டியில் மாணவர்களின்
தனித்துவமான அடையாளம் வெளிப்பட்டு நின்றது என்று கூறினார் தலைமையாசிரியர் மேனகா பொன்னையா.

உலுலங்காட் மாவட்ட  தமிழ்ப்பள்ளிக்கு இடையிலான கபடிப்போட்டி 2024  தொடங்கியது

.

மூன்று நாள் நிகழ்வாக மிகவும் ஆரவாரமாக ஆரம்பமாகியது.
உலுலங்காட மாவட்டத்தில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுடன் தேசிய  மலாய் ஆரம்பப்பள்ளிகளும் கலந்து கொண்டது.

ஆண்,பெண் இரு பிரிவுகளை உள்ளடக்கியப் போட்டியில்
250 மாணவர்கள் கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த பயிற்சி ஆசிரியர்கள் அவர்களின் அடைவு நிலை பரிசோதித்து ஆலோசனைகளை கூறியதால் மாணவர்களின் தனித்துவமான அடையாளத்தை கபடிப் போட்டியில் வெளிப்படுத்தினர்.

அம்பாங் டேவான் டத்தோஸ்ரீ  அமாட் ரசாலி  மண்டபத்தில் நடைபெற்ற போட்டிக்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தலைமையாசிரியர் மேனகா பொன்னையா நன்றி கூறினார்.

பள்ளி மேலாளர் வாரியக்குழுத் தலைவர் ஜேம்ஸ் காளிமுத்து, முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் முருகன் வேலு, பெற்றோர்கள், ஆசிரியர்கள்  ஆகியோரும் மாணவர்களுக்கு  உற்சாகம் ஊட்டும் அளவில்  மாணவ, மாணவிகளை பாராட்டி மகிழ்ந்தனர்.