Kaladevi Subramaniam said that cultural programmes will contribute immensely to our culture.
Kaladevi Subramaniam said that cultural programmes will contribute immensely to our culture.

Date :18 March 2025 News By: RM Chandran
கலை நிகழ்ச்சிகள் நமது கலாச்சாரத்திற்கு பெரும் பங்காற்றும் என்றார் கலாதேவி சுப்ரமணியம்.
கடந்த 15-3-2025 ஆம் நாள் சனிக்கிழமை 'காலத்தால் அழியாத காவியங்கள் 2015 ' எனும் கலை இரவு Dewan tertali, Shah Alam மில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது மூப்போருக்கும் சிறப்பு சலுகை வழங்க,பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
ஒரு விருந்து நிகழ்வுடன் கூடிய கலை நிகழ்சியாக 10 கொண்ட மஞ்சோங் இசை குழுவினர் புதிய, பழைய பாடலுக்கு அழகாக இசையமைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக உலகத்தமிழர்ப்பண்பாடுக் கழகத்தின் தேசியத்தலைவர் டத்தோ மா.கோபாலகிருஷ்ணன், டத்தோஸ்ரீ தினகரன், தொழிலதிபர் புத்ரி சிவம், மை வெளிச்சம். கோம் தோற்றுனர் கணபதி கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கலாதேவி சுப்ரமணியம் அனைவரையும் சிறப்பித்து மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.