ஆஸ்திரேலியே மெர்போர்னில் கம்பன் விழா டத்தோஸ்ரீ எம். சரவணன் உரையாற்றினார்
Kamban Festival in Melbourne, Australia Datuk Seri M. Saravanan spoke

Date :10 March News By: Ganapathy
ஆஸ்திரேலியே மெர்போர்னில் கம்பன் விழா
டத்தோஸ்ரீ எம். சரவணன் உரையாற்றினார்
தமிழ் மொழியின் சொல்லாற்றலை கம்பனின் கம்ப இராமாயாயணத்தில் பார்க்கலாம். அந்தளவுக்கு சொல் இனிமையும் - வல்லமைக் கொண்ட கவிதை நயங்களை மனதால் படிப்பதும். காதால் கேட்பதும் தமிழின் இனிமையை அறிந்து கொள்ள முடியும்.
கடல் கடந்து சென்ற ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களும், இளையோர்களும் தமிழ் மொழியை மறவாமல் பேணிக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்குள்ள கம்பன் கழகம், இவ்வாண்டும் கம்பன் விழாவை எடுத்து நடத்தியுள்ளது.
அந்த வகையில், நேற்று முன்தினம் மெல்போர்னில் நடைபெற்ற கம்பன் விழாவில், கம்பன் கழகத்தின் அழைப்பின் பேரில் சென்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகாவின் தேசிய உதவித் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் நிகழ்ச்சியில் உரையாற்றி அனைத்துத் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழ் மொழியின் மீது தீராதப் பற்று கொண்ட அவர், கம்பனைப் பற்றியும், கம்ப இராமாயணத்தையும் பற்றியும் பேசியது வந்திருந்தவர்களை வியக்க வைத்துள்ளது.
தமிழின் சொல்லாடலைத் தந்த புலவர் கம்பனின் புகழ் இவ்வையகம் முழுதும் பரவட்டும்!