மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் கெஅடிலான் மகளிர்ப் பிரிவு
Keadilan women's wing gears up to face state elections

23ஜூன் 2023-
விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலை எதிர்கொள்ள கெஅடிலான் கட்சியின் மகளிர்ப் பிரிவு தயாராக
உள்ளது. முக்கியத் தொகுதிகளை இலக்காகக் கொண்டு மகளிர்ப் பிரிவின் தேர்தல் இயந்திரம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கெஅடிலான் தேசிய மகளிர்ப் பிரிவுத் தலைவி ஃபாட்லினா சீடேக் கூறினார்.
இந்த தேர்தலில் 30 விழுக்காட்டு பிரதிநிதித்துவத்தை (பெண்
வேட்பாளர்கள்) நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். நமது பணியில்
தீவிரம் காட்டுவதற்கு ஏதுவாக அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும்
ஒற்றுமைத் தலைமைத்துவம் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என
எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு கெஅடிலான் கட்சியின் தற்காப்பு வழக்கறிஞர் திட்டத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.