கெடா கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்,பிரதமர் அன்வார் தலையிட வேண்டும்

Kedah Katumba Estate Tamil School issue: PM Anwar should intervene..S.Chandrasegaran

கெடா கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்,பிரதமர் அன்வார் தலையிட வேண்டும்
கெடா கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்,பிரதமர் அன்வார் தலையிட வேண்டும்

Date :06 Feb 2025  News By : S.Chandrasegaran 

 பாலிங் பெப் 6 -கெடா பாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கத்துப்பா தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலையிட வேண்டும் என ஜொகூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரான திரு S. சந்திர சேகரன் ஆறுமுகம் அறைகூவல் விடுத்துள்ளார்

.

ஏற்கனவே கைவிட்டுப்போன பெட்னோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலைமை தற்பொழுது இந்த கத்தும்பா தமிழ்ப்பள்ளிகு ஏற்பட உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.

சுமார் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட அந்த கத்தும்பா தமிழ்ப்பள்ளி சைய்ம் டாபி (simedarby) நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்தது பிறகு தற்போது அந்த நிலம் கைமாறி விட்டதால் அந்த தமிழ்ப்பள்ளி அங்கும் இங்குமாக தத்தளித்து கொண்டு இருப்பது அறிய படுகிறது.

மேலும்,அந்த தோட்டத்தை விற்கும் போது அங்கு உள்ள தமிழ்ப்பள்ளிக்கு முறையான மாற்று இடம் வழங்கி இருக்க வேண்டும் அதனை அந்த சைய்ம் டாபி நிறுவனம் செய்து இருக்க வேண்டும். ஆனா‌ல் அ‌ந்த நிறுவனம் அப்படி செய்யாதது வேதனையை அளிப்பதாக தெரிவித்த திருS. சந்திர சேகரன்.

காலங் காலமாக அந்த தோட்டத்தில் உழைத்த மக்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்த நன்றி கடன் இது தானா என கேள்வி எழுப்பியதோடு
கல்வி அமைசர் பட்லினா சிடேக் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு மாற்று இடத்தை அப்பள்ளிக்கு வழங்க அந்த நிறுவனத்தை வழியுறுத்த வேண்டும் என முன்னாள் பெக்கோ சட்டமன்ற வேட்பாளருமான திரு S.சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.

www.myvelicham.com Face book / TIK TOK /INTG / YOU TUBE