கோல கெட்டில் கிம் செங் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் மக்கள் சக்தி கட்சி டத்தோ ஓ.ஜி.சண்முகம் கலைவில் கலந்துக் கொண்டார்

Kim Cheng Sri Maha Mariamman Devasthanam Datuk O.G. Shanmugam participated in the dissolution

கோல கெட்டில் கிம் செங் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் மக்கள் சக்தி கட்சி  டத்தோ ஓ.ஜி.சண்முகம்  கலைவில் கலந்துக் கொண்டார்

Date :22 Feb 2025 News By ; Anbarasan Sungai Petani  

கோல கெட்டில் கிம் செங் ஶ்ரீ மகா மாரியம்மன்  தேவஸ்தானத்தின் திருப்பணியினை முன்னிட்டு
மலேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவுடன் கலை கலாச்சார கலை இரவு

.
 இங்குள்ள கிம் செங் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான திருப்பணியினை முன்னிட்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவுடன்,காந்திமதி தலைமையில் கலை கலாச்சார கலை இரவு வெகு சிறப்பாக  ஆலய வளாகத்தில் நடந்தேறியது.

மலேசிய மக்கள்சக்தி கட்சியின் கெடா மாநிலத் தலைவர்  டத்தோ ஓ.ஜி.சண்முகம் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார். இந்த ஆலய திருப்பணிக்கு அனைவரும் தருகின்ற நல்ல ஒத்தழைப்பால் விரைவில்  இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காணும் என்றார்.

இந்த நிகழ்வில்  ஆடல் பாடல் நிகழ்வுகள் என  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.இதில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜெராய் தொகுதித் தலைவர் ஆறுமுகம்  எம்ஜிஆர் வேடமிட்டு சாந்தி சின்னையாவுடன் ஆடிய பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன.