கோலாலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்தின் கருப்பு பட்டயத் தேர்வு

Kuala Langat District Silambam Association Black Diploma Examination

கோலாலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்தின்  கருப்பு பட்டயத் தேர்வு

கோலாலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்தின்  கருப்பு பட்டயத் தேர்வு 
- மணிவேந்தன் 
கோலலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்தின் கருப்பு பட்டயத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேற்று பந்திங் தாமான் ஸ்ரீ புத் ராவில் உள்ள டேவான் ஓராங் ராமாயில் நடைபெற்ற இந்த பட்டயத் தேர்வில் கோலாலங்காட் வட்டாரத்தை சேர்ந்த இருப்பது மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மாவட்ட அளவில்லான இப்பட்டயத் தேர்வில் தலைமை தேர்வு அதிகாரியாக ஆசிரியர் சுப்பிரமணியம் பணியாற்றினார். ஆசிரியர் மேகநாதன் அவர்கள் தேர்வு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்

.

 சிலம்பரசன் மற்றும் மகாகுரு இரா. செல்வராஜு அவர்களின் வழியில் மாவட்டத்தின் 8வது தலைமுறையாக கருப்பு பட்டய தேர்வு நடைபெற்றது. இக்கருப்பு பட்டயத் தேர்வு தேசிய கலைநுட்ப குழு தலைவர் ஆசிரியர் குணாளன் மற்றும் சிலங்கூர் மாநில கலைநுட்ப குழுத் தலைவர்,டத்தோ சிவகுமார் தலைமையில்  நடைபெற்றது. தெலோக் பங்லிமா காரங் சிலம்ப வகுப்பை சேர்ந்த ஆசிரியர் கர்ணன் அவர்களின் மாணவர்களாகிய நிவேஸ் த/பெ சோக்க லிங்கம், சஞ்செய் த/பெ சிவபாலன், மகேந்திரன் த /பெ மணிமாறன், யோகநாத் த/பெ தங்கரா ஜா, தர்வின் த /பெ லோகேஸ்வரன் ஆகிய ஐவரும் தங்களின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து  சிறந்த தேர்ச்சி அடைந்தனர்.

www.myvelicham.com