ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மீண்டும் சாதனை
Kuala Selangor Riverside Tamil School Students Record Again

Date: 13 April 2025 News : Manyventhan
கோலசிலாங்கூர் மாவட்ட ஆரம்பப் பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டப் போட்டி
ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மீண்டும் சாதனை
கோலசிலாங்கூர் மாவட்ட அனைத்து மொழி ஆரம்பப் பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டப் போட்டியில் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3 ஆவது முறையாக மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது
.
கோலசிலாங்கூர் டத்தோ மானான் ஆரம்பப்பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் மாவட்டத்தில் உள்ள தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட மாணவர்களில்
பெண்கள் தனிநபர் பிரிவில் தர்ஷினி த/பெ பாலன் மூன்றாம் நிலையில் வந்து சாதனை படைத்தார். 6ஆம் நிலையில் சாய்கார்த்தியாயிணி த/பெ செல்வம், 7ஆம் நிலையில் சர்மிளா த/பெ பாலன், 8ஆம் நிலையில் ஜெகதிஸ்வரி த/பெ மணிமாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் தனிநபர் பிரிவில் ஜெயம்ராஜ் த/பெ ஜெகநாதன் 5ஆம் நிலையிலும், திவ்யன் த/பெ மணிமாறன் 9ஆம் நிலையிலும், விஸ்வா த/பெ சிவகுரு 45 ஆவது நிலையிலும் வெற்றிப் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் மாவட்ட அளவில் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினர். ஆண்கள் பிரிவில் 4 ஆம் நிலையில் வெற்றிப் பெற்றனர். மேலும், 3ஆவது முறையாக சுழற்கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி. இப்போட்டியில் கலந்து கொண்ட 8 மாணவர்களில் 5 மாணவர்கள் மாநில அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனிடையே பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ப.விஜயலட்சுமி அவர்கள், இப்போட்டியில் அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பயிற்றுனர் திரு.க.மணிமாறன், புறப்பாட நடவடிக்கை துணைத்தலைமையாசிரியர் திருமதி வை.சாந்தி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பெற்றோர் மற்றும் மாணவர் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
www.myvelicham.com