மலாக்கா இளைஞர் பகுதி சிறப்பாக செயல்படுகிறது என்று குகன் கூறினார்.
Kugan said the Melaka youth wing is doing well.
Date :24 Dec 2024 News By : Kugan / ஆர்.எம்.சந்திரன்.
முதல் முறையாக மாநில இளைஞர் பகுதியும் ஷோரின் ரியூ கராத்தே அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்தது.
மாநில இளைஞர் பகுதி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இந்த நிகழ்வை பெரிய அளவில் மலாக்கா UTEM விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்து நடத்தியதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் குகன் தெரிவித்தார்.
இந்த கராத்தே விளையாட்டுப் போட்டியில் 500 இளைஞர்கள் 5 வயது 30 வயது வரை உள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பல பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.
திறந்த வெளி கராத்தே கிண்ணப் போட்டிக்கு மலாக்கா மாநில மஇகா தலைவரும் காடேக் சட்ட மன்ற உறுப்பினமான மாண்புமிகு டத்தோ சண்முகம், மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் திரு.கலையரசு,டத்தோ Azmi, கராத்தே மலேசியா, டத்தோ Loh ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
மலாக்கா மாநில இளைஞர் பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சிறப்பான முறையில் துடிப்புடன் இயங்கி வருவதாகவும் இது போன்ற பல விளையாட்டு
போட்டிகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்தி வருவதையும் குகன் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில மஇகா இளைஞர் பகுதியினர் நேரடியாக களம் இறங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இன்னும் பல்வேறு திட்டங்களை வகுத்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
மலாக்கா மாநில மஇகா தலைவர் மாண்புமிகு டத்தோ சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலிலும் தேசிய இளைஞர் பகுதி தலைவர் அரிவின் கிருஷ்ணன் ஆலோசனை பேரிலும் மலாக்கா மாநில மஇகா இளைஞர் பகுதி சிறப்பாக செயல் படுவதாகவும் . தற்போது பல இளைஞர்கள் மஇகா வின் செயல் திறனை கண்ணுற்று மஇகா'வில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் குகன் தெரிவித்தார்.
செய்தி ஆக்கம்: ஆர்.எம்.சந்திரன்.
www.myvelicham.com / face book /Tik Tok / You Tube