கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவிற்குழு மன்றத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வழங்கினார்.

Kulim assemblyman Wong donated RM10,000 to the Tamil School Management Board Council.

கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவிற்குழு மன்றத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி  வழங்கினார்.
கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவிற்குழு மன்றத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி  வழங்கினார்.

Date :28 Jan 2025 - RM Chandran

கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங்
தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவிற்குழு மன்றத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி  மானியம் வழங்கினார்.

கெடா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர்  வாரியக்குழு மன்றத்தின் 10 ஆவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூலிம் சட்டமன்ற உறுப்பினர்  Wong Chia Zhen 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

கடந்த 26-1-2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ மலேசியா 
தங்கும் விடுதியில் நடைபெற்ற கெடா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழு மன்றத்தின் 10 ஆவது மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்த கூலிம் சட்ட மன்ற உறுப்பினர் வோங்   10 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக வாக்குறுதி
அளித்தார்.

மாநிலத்தில் 59 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுவதாக கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக்குழு மன்றத்தலைவர் ஆசிரியர்  குமரன் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும்
புதிய பள்ளி ஆண்டில் மூன்று தமிழ்ப்பள்ளிகளில் குறைவான மாணவர்களை  கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் அவற்றுக்கான  முயற்சிகளை கெடா மாநில தமிழ்ப்பள்ளி  மேலாளர் வாரியக்குழு ஏற்பாடு செய்து வருவதாக  தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுத்தலைவர் குமரன்
தெரிவித்தார்.
நிகழ்வில்  மலேசியத் தமிழ்ப்பள்ளி  மேலாளர்  கூட்டமைப்பு வாரியத்தலைவர் ராஜமாணிக்கம் கருப்பையா, கெடா மாநில தலைமையாசிரியர்கள் பெ.ஆ.சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியங்கள்  டோங் ஜோங் சீன மொழி காப்பகத்தின் வழி முறைகளை பின் பற்ற வேண்டுமாறு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். 

நாம் பல்வேறு தமிழ் அமைப்புகளை
வைத்திருந்தாலும் அவர்கள் அளவுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

1951 ஆம் ஆண்டு தோற்றுவித்து 1954 ஆம் ஆண்டு டோங் ஜோங் அமைப்பை பதிவு செய்துள்ளனர். பொருளாதாரத்திலும் வலிமையுடன் உள்ளது.இவற்றுடன் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும். 

டோங் ஜோங் அமைப்புடன் நல்லுறவை வைத்து ஒரு சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த  கெடா மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழு மன்றத்தின்
தலைவர் ஆசிரியர் குமரன் அவர்களுக்கு மை வெளிச்சம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.