குறிஞ்சிக் குமரனார் நூற்றாண்டு விழா.

Kurinji Kumaranar Centenary Celebration.

குறிஞ்சிக் குமரனார் நூற்றாண்டு விழா.
குறிஞ்சிக் குமரனார் நூற்றாண்டு விழா.

Date :27 Dec 2024 News By: Tamilan Gangapulay

மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் மலேசியத் தனித்தமிழியக்கத் தந்தை  சா. சி. குறிஞ்சிக்குமரனார் நூற்றாண்டு விழா   கூலிம் தமிழ்ப்பள்ளியில்  நடைபெற்றது. 

அஞ்சலி கதிரவன் நாதசுவர இசையுடன் ஆரம்பமான நிகழ்வில், விரிவுரைஞர்கள்,தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் தமிழ் உணர்வாளர்கள், குறிஞ்சிக்குமரன் துணைவியார்,
 பிள்ளைகள் சாத்தன், கலையரசி கலந்து கொண்டனர்.

டத்தோஸ்ரீ ஆனந்தன்,  குறிஞ்சிக்குமரனார் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். அவரின் வரலாற்றை தலைமையாசிரியர் கோவி சந்திரன், விளக்கினார். பாவாணர் மன்றத்தின் மனோகரன் கவிதை வாசித்தார்,

 குறிஞ்சியார் குறித்தும் தமிழியல் அறநெறிகள் குறித்தும் தமிழியல் ஆய்வறிஞர்  இர. திருச்செல்வன் ஆய்வுரை வழங்கினார்

இதனைத்தொடர்ந்து திருக்குறள் ஓதுதல், கவிதை, தனித்தமிழ்ப்பாடல், பேச்சு, வண்ணம் தீட்டும், ஒளிக்கீற்று, விளக்கம் தட்டி அணி, சுவரொட்டி அணி,திரட்டேடு அணி, கிளை ஆவணம் அணி,தமிழ்நெறி அறிவுத்திறன் தேர்வு, தமிழிய நூல்கள், மின்னியல் பதாகை உருவாக்கம், ஓரரங்க நாடகம், குறும்படம் அணி  என்று பதினைந்து வகையாக போட்டிகளில் குழந்தைகளும் மாணவர்களும் பங்கெடுத்தனர். அனைவருக்கும் நற்சான்றிதழும் நினைவு பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.