காதல் எப்போதும் அழியாது -அது நம்மோடு வாழும் என்று  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Love will never die - it will live with us Datuk M. Gopalakrishnan Said.

காதல் எப்போதும் அழியாது -அது நம்மோடு வாழும் என்று  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
காதல் எப்போதும் அழியாது -அது நம்மோடு வாழும் என்று  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Date :14 Feb 2025  News By ; Jayarathan 

காதல் எப்போதும் அழியாது -அது நம்மோடு வாழும் என்று 
டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

காதலுக்கு வயதில்லை, மொழியில்லை, இலக்கியமில்லை, காதல் எப்போதும் அழியாது.அது நம்மோடு வாழும்.  இரு உள்ளங்கள் இணைந்தாலே அங்கே காதல் அரும்பி விடும்.சங்க கால இலக்கியத்துடன் இருந்து இந்த காதல் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்று  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன். 

தலைநகரில் நடைபெற்ற காதல் இனிது- அன்பர்கள் தினம் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ  மா. கோபாலகிருஷ்ணன்,
தாம் காதலித்து திருமணம் செய்ததை நினைவு கூர்ந்தார். இப்போதும் தம் மனைவியை காதலித்து வருவதாகவும் பெற்றோரையும் மதித்து போற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

.

இதனைத்தொடர்ந்து  60 ஆண்டில் வெளிவந்த நீதிக்கு பின் பாசம் திரைப்படப்பாடல் 'மானல்லவோ கண்கள் தந்தது, மயிலல்லவோ சாயல் தந்தது  தேனல்லவோ இதழை தந்தது சிலையல்லவோ அழகை தந்தது. இது காதலன் பாடுவது,
காதலி பாடுவதாக  'தேக்கு மரம் உடலை தந்தது சின்னயானை நடையை தந்தது பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது பொன்னல்லவோ நிறத்தை தந்தது
என்று கவியரசு கண்ணதாசன் பாடலை  மேற்கோள் காட்டினார்.  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன்

நிகழ்வில் வழக்கறிஞர்,பட்டி மன்ற நடுவர், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர் முனைவர் S.D.கலையமுதன், முனைவர் மன்னர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Quins Empire Resources Except To Make lf Perfect DR.SARALA DEVI  நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் .