மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 108 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

Makkal Thilagam MGR 108th Birthday Celebration

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 108 ஆம் ஆண்டு பிறந்த நாள்  விழா
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 108 ஆம் ஆண்டு பிறந்த நாள்  விழா

Date 21 Jan 2025  News By :RM Chandran 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின்  108 ஆம் ஆண்டு பிறந்த நாள் கலை விழா கடந்த 17-1-2025 ஆம் நாள் தலைநகர் விஸ்மா துன் சம்பந்தன் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் மிகச்சிறப்பாக  நடைபெற்றது.
17-1- 1917 ஆம் நாள் ராமர் ஜெயந்தி அன்று பிறந்ததால் ' அந்த ராமச்சந்திர்மூர்த்தியே பிறந்த விட்டார் என  நினைத்து அவருக்கு 'ராமச்சந்திரன்' என்ற பெயரை அவரது பெற்றோர்கள் வைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய உலகத்தமிழர்ப்ப்பண்பாட்டு  மன்த்தின் தலைவர் டத்தோ மா.கோபாலகிருஷ்ணன்  எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் தம்மை வெகுவாக கவர்ந்த இரண்டு பாடலை முன்னிலை படுத்தினார்.
'இல்லாமை நீக்க வேண்டும்  பொருள் ஆக்க வேண்டும். இங்கு எல்லோரும் வாழ வேண்டும் முன்னேற எண்ண வேண்டும்,நல் எண்ணம் வேண்டும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும்' என்று  அன்னமிட்ட கை பாடலை பாடியும் காட்டினார்.

அதனைத்தொடர்ந்து புக்கிட் கமுனிங் சட்டன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசினார் எம்.ஜி.ஆர் பற்றிய  நினைவுகளை கவிஞர் பெர்னாட்ஷா'வும், கவிதையை கவிஞர் சீராகி'யும் வாசித்தனர்

.
'பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக 'என்ற பாடலுக்கு மலேசிய எம் ஜி.ஆர்கள் அசத்தலுடன் அனிச்சலும் வெட்டப்பட்டது. அரங்கம் நிறைந்த கூட்டத்தைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எஸ்.பி.மணிவாசகம் கடந்த 21 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து நடத்தி வருவதாகக் கூறினார்.

' இது தானாக வந்த கூட்டம் எம்.ஜி.ஆருக்காக வந்த கூட்டம் என்று  கூறியவர், பல் வேறு துறையில் பெயர் பாதித்துள்ள 17 பேருக்கு விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு காணொலியாக  ஒளியேறியது.   புகழ்ப்பெற்ற உள்ளூர்  கலைஞர்களின் ஆடல் பாடல்கள்  எம்.ஜி.ஆர்களின் அபிநயங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.