உலகத்தர மதிப்பீட்டில் மலேசிய ஏர்லைன்ஸ் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Malaysia Airlines has a world-class rating.

உலகத்தர மதிப்பீட்டில் மலேசிய ஏர்லைன்ஸ் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலகத்தர மதிப்பீட்டில் மலேசிய ஏர்லைன்ஸ் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Date : 23 April 2025 News By: PunithaiPerumal 

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும்  (Brand) என்றும், உலகத்தர மதிப்பீட்டில் மலேசிய ஏர்லைன்ஸ் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

இதன் மதிப்பு 209 சதவிகிதம் உயர்ந்து, 607 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சிக் கண்டு, உலகளவில் 45-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு பெரிய சகாப்தத்திற்குப் பின்னர், தர வரிசையில் இதுவொரு குறிப்பிடத்தக்க மறு பிரவேசகமாகும். இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது, கடற்படை மேம்பாடு, முக்கிய பாதை மறுசீரமைப்புகள், டிஜிட்டல் மாற்றம்,  அனைத்துலக விரிவாக்க ஆகியவற்றினை மேற்கொண்டதன் பயனாகும்.

 

இந்த விமான நிறுவனம்  (Brand Strength Index (BSI) score of 78.2/100 AA) மதிப்பீட்டினைப் பெற்றுள்ளது. விமான நிறுவனத்தின் உள்நாட்டின் பயணிகளின் ஆதரவு, நம்பிக்கை ஆகியவற்றால் இந்த மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளதாக Brand Finance தெரிவித்தது

 ஏர் ஆசியா விமானத் நிறுவனம் இரு நிலைகளில் முன்னேறி,  இப்போது உலகளவில் 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, தற்போது இதன் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்கா டாலராக உயர்ந்துளள்து. குறைந்த கட்டணம், வலுவான நிதித்திறன், அதிமான பயணிகளின் பயன்பாடு, சீனாவின் சோங்கிங் மற்றும் கென்யாவின் நைரோபி ஆகிய வழித்தடங்களின் விரிவாக்கத்தின் காரணங்களால் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

இதனிடையே ஏர் ஏசியா உலகின் 11-ஆவது வலுவான விமான போக்குவரத்துள்ளது. இதன் மதிப்பீடு BSI – 84.2/100 மற்றும் AAA- (Brand )வலிமை மதிப்பீட்டுடன் தனது வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 
  இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சிகளைக் குறித்து ஆசிய பசுபிக் நிர்வாக இயக்குநர் அலெக்ஸ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

www.myvelicham.com / Face book/ / X / Tik Tok / Linked in / You Tube