"பிலித்தா" இயக்கம் இலங்கையிலும் தொடங்குகிறது!!!
Malaysia "Pelita" NGO movement also begins in Sri Lanka!
15 May 2023
"பிலித்தா" இயக்கம் இலங்கையிலும் தொடங்குகிறது!!!
இலங்கையின் தற்போதைய நிலமை கருதி இலங்கை வாழ் மக்களுக்கு இன மத பேதமின்றிய சமூக நல சேவையை வழங்க "பிலித்தா" இயக்கம் முன்வருகிறது.
இலங்கையின் மலேசியாவுக்கான அதிமேதகு தூதுவர் பத்லி ஹிஷாம் ஆதம் அவர்களை 2022.05.09 ஆம் திகதியன்று சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.அவர் எங்கள் குழுவினரையும் எங்கள் இயக்கத்தையும் ஆதரித்து முன்நின்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாப் பள்ளிவாசல்கள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள்,தேவைகள் போன்றன இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பதிலும் மேலும் மத்ரஸாக்களின் மேம்பாடு,பொது இடங்களின் அபிவிருத்தி போன்றவற்றில் "பிலித்தா" இயக்கம் பங்கெடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர் போன்ற பல்லினத்தவர்களும் வாழ்வதனால் சகல சேவைகளும் இன மத பேதமின்றி சமத்துவமானதும் வேற்றுமைகள் இன்றியும் அமைய வேண்டும் என்பது தனது கோரிக்கையாகும்"
இலங்கை வாழ் மக்களுக்கு நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமத்துவமானதும் தரமானதுமான சேவைகளையும் உதவிகளையும் வழங்குவதே தமது குறிக்கோளாகும்" என "பிலித்தா" இயக்கத் தலைவர் மொஹமட் நஸீர் மொஹிடீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது, இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பத்லி ஹிஷாம் ஆதம் அவர்களுடன் 'பிலித்தா' இயக்கத் தலைவர் மொஹமட் நஸீர் மொஹிடீன் அவர்களும் குழு உறுப்பினர்களான மொஹமட் நபீர் மற்றும் மொஹமட் அனஸ் போன்றோரை இப் புகைப்படத்தில் காணலாம்.
இலங்கை செய்தித் தொகுப்பு:
ஏ.எம் பாதிமா நஸ்ரா
www.myvelicham.com Genaation Young News Portal (since 2010)