மலேசிய இந்தியர் கலைஞர் அறவாரியத்தின் ஏற்பாட்டில் விருது விழா
Malaysian Indian Artist Foundation Awards Ceremony

Date : 05 March 2025 News By: RM Chandran
மலேசிய இந்தியர் கலைஞர் அறவாரியத்தின் ஏற்பாட்டில்
மாபெரும் கலை – விருது விழா நடைபெறும்
டத்தோஸ்ரீ எம். சரவணன்
தலைநகர் மஇகா தலைமையகத்தில்
நடைபெற்ற மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம் 'யாசி' செய்தியாளர் சந்திப்பின் போது தாப்பா நாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு நினைவில் நிற்கும் துன், டாக்டர் சாமிவேலு அவர்களால் எட்டு லட்சம் வெள்ளி நன்கொடை மூலமாக தோற்றுவிக்கப்பட்டது மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம்.
ஆனால் அந்த நிதி வறுமை நிலையில் வாழும் கலைஞர்களுக்கும் மறைவை தழுவிய கலைஞர்களுக்கும் முறையாக சென்று சேரவில்லை என்று மை வெளிச்சத்திடம் தொடர்பு கொண்ட மூத்தக் கலைஞர்கள் பலரும் தங்களின் மனக்குறைய தெரிவிக்கின்றனர்.
வெறும் பொன்னாடை, மாலை அணிவித்து கலைஞர்களை வெறும் கையோடு அனுப்பாமல் கொஞ்சம் பண முடிப்பை வழங்குமாறு மை வெளிச்சம் பரிந்துரை செய்து கேட்டுக்கொள்கிறது.
www.myvelicham.com