மலேசியா தமிழர்களின் அரசியலும் அரசும் ?
Malaysian Tamils politics and government policies.by Pon Rangan
Date :15 Dec 2024 News By: Pon Rangan
இந்தியர்களில் 90% மலேசியா தமிழர்கள் ஜனநாயக சுதந்திர மௌனத்தில் உள்ளார்கள்.
இன்னும் 33 ஆண்டுகளானால் ஒரு நுற்றாண்டை தொட்டுவிடுவோம்.இப்போதுள்ளவர்கலில் 60% காணாமல் போய் விடுவோம். பிறகு மீண்டும் ஒரு மௌன அரசியல் சகிப்பில் அரசின் சலுகை பொருளாதாரம்.
நாட்டில் சுமார் 5ஆயிரம் கோவில்கள், 530 தமிழ்ப்பள்ளிகள். இதனுடன் பி ஐ பி ஜி. எல் பி எசுகள்.பழைய மாணவர் சங்கங்கள்.தமிழ் இளையர் மன்றங்கள், அறவாரியங்கள்.சுமார் 3000 பொது இயக்கங்கள்,சுமார் 5 ஆயிரம் நிறுவனங்கள். 50 வணிக சம்மேலங்கள்,
ஒரு மித்திரா. நாட்டில் 1500 ஜீ எல் சிகள் உண்டு ஒன்று கூட இண்டியனுக்கு இல்லை..இதற்கெல்லாம் அரசு, அரசியல் காரணங்கள் உண்டு. இந்திய நாடாளமன்ற நிகராளிகளுக்கு தெரியும். ஆனால் பதவிக்கும் சீட்டுக்கும் தெரியாததுபோல பல மாயைகளில் மதி மயக்கம்.
அதுதான் என்ன?
அரசியல் நாடகம் கடந்த 67 ஆண்டுகலாக நடக்கிறது. இந்தியன் அரசியல் கட்சிகள் தலைவர்கள் பின்னால்,முன்னால் சுய சுயம்பிகளாக உள்ளார்கள்.ஏன்? ஏதற்கு? விடை தேடுவோமா?
இனம்,சமூகம், அரசியல், பொருளாதாரம், தமிழ்க் கல்வி, பொதுவான உயர்க்கல்வி வளர்ச்சிக்கு அரசியலில் படித்த புத்திஜீவிகள் எவரும் அரசியல் அரசு வழி பங்களிக்கவில்லை என்ற குறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனல் ஒருத்தரும் கவலை படுவதில்லை. இண்டராப்பு கத்தி, கத்தி தொண்டையில் எலும்பு சிக்கி கிழிந்து இன்றும் அரசியல்தன லச்சனத்தில் சில வைபிகள், சில சமூக வளையில் ஊடக ஓலமிடுகிறார்கள்
.
அரசியல், அரசு பதவிகளில் இருக்கும் இந்தியர்களில் பெரிய அளவில் அரசு நிபுணர்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் மலேசியாவில் இனம் இப்படி கல்லடியில் தொடர் ரத்தம் வடிக்காது.நாடு, பல கலாசார, பன்முகப் பொருளாதாரம். பல்லினப் போராட்டத்தில், மதச் சவால்கள், இனம், கல்வி, வணிகம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறது. தேசிய பொருளாதார நீரோட்டத்தில் அமைதிப் பிரச்சாரங்கள், பரிந்துரைகள் இருந்தபோதிலும், இலக்கும் எல்லையும் இந்திய மக்களுக்கு தெரியவில்லை. அரசும் மௌனிக்கிறது.
67வது மெர்டேக்கா விழாவை சொந்த பணத்தில் கொடி ஏற்றி கொண்டாடினோம். சுமார் 3மில்லியன் இந்தியர்களின். 0.3% பங்குதான் நம் சொத்தை சொத்தாம். வெட்கக்கேடு. இந்தியர்கள் குறிப்பாக 1800களில் வந்த பழங்குடியினருக்கு சிறந்த பிரதமர் மற்றும் நிரந்தர உரிமைகள் திட்டம் வகுக்க அறிவாளிகள் இல்லை. தமிழ்க் கல்வி, சமயம் மத்திய அரசின் சட்டத்தில் மட்டுமே உள்ளது என்கிறார்கள் . பொருளாதாரத்தில் இந்தியர்களுக்கு நிலையான அரசு கொள்கை இல்லை. எங்களின் அழுகையை கேட்கும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. அரசியல் ஆளுமையில் உள்ள பிரச்சாரப்பாத்திரங்கள், இந்திய தலைகள் அவர்களின் சிறப்புரிமைக்கு இனத்தை அடமானம் வைக்கின்றனர். மாற்றங்களில் நாம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெறப்போகிறோம். மற்றும், மறுமலர்ச்சிகள் மாற்றம் என்றால் என்ன ?
மலேசியாவில் 6.8% இந்தியர்களாம். இதில் 90% தமிழர்களாம். தற்போது இந்தியன் கட்சிகளில் அரசியலில் உள் இன,சாதிய அடிப்படையிலான தலைமைத்துவ சிக்கலில் சிக்கி உள்ளது. கடந்த காலங்களில் மஇகா, ஐபிஎப் போன்ற கட்சிகள் வழி ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைமைத்துவம் இருந்துதது. அனால் அரசியல் அநீதிகள் தலை தூக்க தூக்கு மாட்டிக்கொண்டது. ஆனால் தொண்டை தப்பியது. அதற்கு எதிராக கொள்கையே இணைப்பு கொண்டவர்கள் மஇகாவுக்கு சவாலாக இருந்தனர். ஐ பி எப்பும் இணைந்துக்கொண்டு பாக்காத்தானை அம்னோவில்
ஏதோ சாதிக்கிறர்கள். ஆனால் அரசியல் உரிமை என்பது மொட்டை மாடி வண்ணக்கிளிகளின் கூண்டில் கதைதான். ஊரு மெச்சிக்க மாமியார் அம்மா சத்தம்தான் மேடைகளின் ஈயடிச்சன் முழக்கம்.
இதுவரை ஒரு வகையில் இந்தியர்கள் தங்கள் சுய முயற்சியால் உழைத்து வாழ பழகிக்கொண்டார்கள். அரசு அல்லது அமைச்சுகள் கொடுக்கும் கடன் அல்லது மானியங்கள் குறிப்பாக நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் இருந்த இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கட்சிகளில் சுதந்திரமாக செயல் பட அமைப்புகள் இல்லை. குறிப்பாக தமிழர்,தமிழ் மொழி.பொருளாதாரம் வணிகம் சமூகம் போன்றதில் தலைவர்களின் ஆளுமையற்ற நிலைதான் தொடர்கிறது. நாட்டில் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கும் கட்சிகளில் இனம் சார்ந்த அமைப்பு விதிகள் கட்சிகளில் உருவாகி அரசு,அரசியல் ஆளூமைக்கொண்ட உதவிப்பிரிவுி இலாகா உருவாக்கப்படுவது பாக்காத்தான் காலத்தின் கட்டாயமாக்க இந்தியர்கள் தமிழர்கள் ஆளுமைக்குழு இருக்க வேண்டும்.
பல்லின கட்சிகளான டி ஏ பி, கேயடிலான் கட்சிகளில் அதிகாரிகளை கட்சி மக்கள் தேர்வு செய்தாலும் இவர்களின் அரசியல் ஆளுமை பதவி கட்டுபாபாட்டில் அடிமை ஆளுமையைத்தான் காணமுடிகிறது. எம் பி களின் அல்லது அமைச்சர்களின் சிறப்பு அதிகாரிகளின் நிலை சொல்ல எழுத வெட்கக்கேடாக உள்ளது. ஒருத்தனும் போன் எடுப்பதில்லை.ஏன் ?
ஆனால் வேண்டிய உறவுக்குருவிகளுக்கும் வாடகை கோழிகளுக்கும் அரிசி போட்டு சமூகத்துக்கு துரோகம் செய்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு சாபக்கேடு நடந்துள்ளது. அன்வார் சொன்ன மித்ராவின் "போரென்க்ஷ்சிக் ஓடிட்" ஆய்வுக்கு பழைய குருடி கதவை மூடுடி உத்தரவாகக்கூட இருக்கலாம்.சபாக்ஷ்! நாட்டு மக்களுக்குக்கு நன்றாக நினைவுண்டு "சாயா ஜாடி பி எம், சாயா ஆக்கான் மெஸ்த்தி புவாட் போரின்க்ஷ்சிக் ஓடிட் அத்தாக்ஷ் மித்ரா?" ஆண்டுகள் 2021,2022,2023,2024 பழைய அலுவல் அதிகாரி மிதரா புதியதில் அதுவும் பெரிய அதிகார பொறுப்பில் கே- பியாம்.
இன்று ஊழல் பூப்பந்து, தேர்தல் முழக்கம் சூழல் முற்றாக மங்கி மாறிவிட்டது. இப்பொழுது பல்லின மக்களின் கட்சிகள் சிறுபான்மையான இந்தியர்களின் அதிகார அங்கத்துவத்தை உடைத்து ஒரு வலிமையில்லா சிறுபான்மை அரசியல் கட்சியாக்கி அடிமையாக இருக்கும் சூழலை உருவாக்கி விட்டார் அன்புள்ள மாற்றான் தாயின் பாப்பா.
இந்த நிலையில் இந்தியர்களுக்கு அரசியல் குரல் என்பது அவர்களிடையே நிகழும் சந்தர்ப அரசியலால், குண்டு சட்டிக்குள் பாம்புகள் நகரும் அளவில்தான் புக்ஷ் என ஒலிக்கின்றது.புதிய விடியல் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்த இனமாக மிதக்கிறோம். வாடகை படகில் ஆங்காங்கே பொருளாதார ஓட்டைகள். ஒரு புறம் அடைத்தால் இன்னொரு புறம் சிக்கல் ஒட்டையில் வடிகிறது. புது பதவியில் பழைய ஆணிகளின் அரசியல் அலாவன்க்ஷ் அணிகள்.
இதில் எதிர் கட்சிகளில் இருக்கும் இந்தியர்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தும் வகையில் குரல் எழுப்புவதும் ஒரு புரமொசன் பொட்டிக்கு போட்டியாகவே நிகழ்ந்து வருகிறது
.
இப்படிப்பட்ட ஏமாற்றங்கள் கலைய அரசுக்கு இளையர் நியமனம் வழி புதிய சமுதாயத்தின் உரிமை வழி செயலாக்கம் பெற வேண்டும். நவீன ஊடக அறமற்ற அரசியலில் குத்தகை பதவியில் தடி எடுத்தவன் எல்லாம் குரங்காட்டம் ஆடக்கூடாது.
இதற்கு மாற்று வழி என்ன என்பதை நாம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லின நாட்டில் தலைவன் சரியாக பொது நல சார்புடைய எண்ணத்தில் குறிக்கோளில் செயல் பட அரசு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்து எல்லா இனத்தையும் காக்க உறுதி கொள்ள வேண்டும். அதுவே பிரதமர். இன கட்சிகளின் தலைவர்கள் அரசியல் அறம் காத்து செயலாக்கம் காணும் உரிமை உந்துதலுடன் இருக்க பிரதமர் கண்ணையும் கதவையும் திறந்து விட வேண்டும்.
இது போன்ற வினாக்கள் நம் மனதிலே எழுகின்றன. இவற்றுக்கு விடை தேட நாம் நம் பொருளாதார படைப்பாற்றல் மிக்க திட்டங்களை பிரதமருக்கு எழுத ஆரம்பிக்க வேண்டும். ஒரு சிறுபான்மை இனம் பொருளாதார வழியில் தனது நிலையை மீளாய்வு செய்து அந்த நிலையை அர்த்தமுள்ள அரசியல்,அரசு கொள்கையாக்கி நிலையான நடவடிக்கை நிலையோடு ஒப்பிட்டு, எழுச்சி பெற 16 வது பொது தேர்தலுக்குள் வழிகளை முறை படுத்த நாட்டுக்கும்,சமுதாயத்திற்கும் அவசியமாகும். அதை உருவாக்கும் பணி அரசுக்கு மட்டும்தான் உண்டு என நினைவுப்படுத்த விரும்புகிறோம். நடப்பில் இருக்கும் பழைய பூனைகள் புது எலிகளை பிடிக்காது.ஆனால் பழைய எலிகளின் பதவிகள் இனத்துக்கு பேராபத்து என்பதை வாக்களர்கள் உணர்ந்தால் இனம் மீட்சி பெறும்.
பொன் ரங்கன் தலைவர்
மலேசிய நாம் தமிழர் இயக்கம்.
11/12/2024 பாரதி பிறந்த நாளறிவு.