மலேசிய ஆசிரியை தமிழ்தனாவின் நான்காம் உலக சாதனை.
Malaysian teacher Tami lthana's fourth world record

Date :17 April 2025 News By: Tanaletchumy Masai
இயல், இசை நாடகமென முத்தமிழ் சார் துறைகளில் தடம் பதித்து வரும் மலேசிய ஆசிரியர் முத்தமிழ் கலையரசி தனலெட்சுமி இராஜேந்திரன் (திருமதி அ.ஆ.தமிழ்த்திரு) அவர்கள், உலக தாய்மொழி நாளை முன்னிட்டு இந்திய நாட்டின் தேசியக் கல்வி அறக்கட்டளையும் சென்னெக்ஸ் குழுமமும் இணைந்து நடத்திய உலக சாதனையைப் பதிக்கும் முயற்சியில் பங்குப்பெற்று தமது நான்காவது உலக சாதனையைப் பதித்துள்ளார்.
இணைய வழியில் 21 நாடுகள், 02.43 மணி நேரத்திற்குள் 20 பட்டி மன்றங்களை பன்னாட்டு தமிழ் ஆளுமைவாதிகளின் கூட்டு முயற்சியில் சமர்ப்பித்து உலக சாதனையை ‘ஆல் இந்தியா உலக சாதனைப் புத்தகத்தில்’ பதித்துள்ளனர்.
மலேசியாவை பிரதிநிதித்து ஆசிரியை தனலெட்சுமி, பங்குப் பெற்ற நைஜிரியா நாட்டைச்சேர்ந்த பேச்சாளர் திருமதி கீத்தா சங்கர் அவர்களுடன் வாதம் செய்து உலக சாதனையில் பெயரையும் பதித்துக்கொண்டார்.
இதற்கு முன் 10 மணி நேரத்தில் 100 சாதனையாளர்களைப் பற்றி பேசிய முயற்சியில் தமது முதல் உலக சாதனையையும் ,100 படைப்பாளர்கள் 18 கலைகளைப் படைத்து தமது இரண்டாவது உலக சாதனையும் மிகப் பெரிய புள்ளிக்கோலம் போட்டு தமது மூன்றாவது உலகச் சாதனையை அனைத்துலக லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு பதித்துள்ளார்.
இவ்வனைத்து உலக சாதனைகளும் தமிழ்மொழி, கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைத் தாங்கியது.
தனது சாதனைகளுக்கும் பக்கபலமாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு நன்றி கூறினார்.
www.myvelicham.com Face book