மலேசியாவின் பொருளாதாரம் 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Malaysia's economy recorded a growth of 5.6 percent
கோலாலம்பூர், 12May 2023 :
மலேசியாவின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் இது முக்கியமாகத் தனியார் துறை வளர்ச்சியால் உந்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வீட்டுச் செலவுகள், தொடர்ச்சியான முதலீட்டு நடவடிக்கைகள், மேம்பட்ட தொழிலாளர் சந்தை மற்றும் அதிக சுறுசுறுப்பான சுற்றுலா நடவடிக்கைகள் ஆகியவற்றால் வளர்ச்சி ஏற்பட்டது எனப் பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) கவர்னர் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் கூறினார்.
“2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து வலுவாக உள்ளது மற்றும் உள்நாட்டு தேவைக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் பொருளாதாரத்தின் செயல்திறனை அறிவிக்கும் போது, “முழு பொருளாதாரமும் இனி நெருக்கடியில் இல்லை, தொடர்ந்து பலம் பெறுகிறது” என்று கூறினார்.
– நன்றி பெர்னாமா