துன் சாமிவேலுவின்   89 பிறந்த நாள் விழாவில்  இன்றைய மஇகா தேசியத் தலைவர்  கலந்துக் கொள்ளவில்லையே?  ஏன்.....?

Memorable Tun Samy Vellu 89 Birthday Party Current MIC National President Not attending? Why.....?

துன் சாமிவேலுவின்   89 பிறந்த நாள் விழாவில்  இன்றைய மஇகா தேசியத் தலைவர்  கலந்துக் கொள்ளவில்லையே?  ஏன்.....?
துன் சாமிவேலுவின்   89 பிறந்த நாள் விழாவில்  இன்றைய மஇகா தேசியத் தலைவர்  கலந்துக் கொள்ளவில்லையே?  ஏன்.....?

Date:07 March 2025 News By:Rm Chandran 

 

நினைவில் நிற்கும் துன் சாமிவேலுவின்  
89 பிறந்த நாள் விழாவில் 
இன்றைய மஇகா தேசியத் தலைவர் 
கலந்துக் கொள்ளவில்லையே? 
ஏன்.....?

கடந்த 6.3.2025 நாள் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மதிப்புமிகு துன் சாமிவேலு அவர்களின் 89ஆவது பிறந்த நாள் விழாவில், தற்போதைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்துக் கொள்ளாமல் போனது ஏன்?.... என்று வருகைப் புரிந்த பல மஇகாவின் மூத்த தலைவர்கள் வசை பாடியதும், அவர்களின் முணுமுணுத்ததுடன், ‘இன்று நீங்கள் நடந்துக் கொண்டது போல், நாளை உங்களுக்கும் நடக்கும்’ என்று சில மூத்த மஇகா தலைவர்கள் தங்களது மனக்குமுறலைக் கொட்டியதையும் கேட்க முடிந்தது. 


எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மத்திய செயற்குழுவால் திட்டமிடப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு, அவற்றின் ஒப்புதலோடு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், துன் ச.சாமிவேலு அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியை தேதியை தேர்வு செய்தவர், அன்றையத் தேதியில் மஇகாவின் தேசியத் தலைவராக இருக்கும் மதிப்புமிகு டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்  கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது அவருக்குத் தெரியாதா?

இதனால், துன் சாமிவேலுவின் புதல்வரும், மேலவை உறுப்பினருமான  மாண்புமிகு டத்தோஸ்ரீ ச. வேள்பாரியின் மனம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்பதை வின்னேஸ்வேரன் உணர்வாரா?

மேலும் துன் சாமிவேலு அவர்களின் பிறந்த நாள் ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதிதான் என்று நினைத்திருந்த பலருக்கு, அதற்கு முன்பதாகவே பிறந்த நாளைக் கொண்டாடியது துன் மீது அபிமானம் கொண்ட  தொண்டர்கள், உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் அவர்மீது மரியாதைக் கொண்டவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். 

நல்லவேளை, மஇகாவின் துணைத் தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் நிகழ்ச்சியை முழுமையாக முன்னின்று சிறப்பாக நடத்திய விதமானது மஇகாவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களின் மனங்களை குளிர வைத்தது.

www.myvelicham.com Face book